சேலம் கோட்டம்-கேரள அதிகாரிகள் அட்டகாசம்
சேலம்:பாலக்காடு ரயில்வே கோட்ட அதிகாரிகளின் அராஜக உத்தரவின் காரணமாக சேலம் ரயில்வே கோட்ட தற்காலிக அலுவலகத்திலிருந்ததொலைபேசி, ஃபேக்ஸ் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
பாலக்காடு கோட்ட ரயில்வே அதிகாரிகள், சென்னையில் உள்ள தெற்கு ரயில்வேயில் பணியாற்றி வரும் சில மலையாள உயர் அதிகாரிகளின்ஒத்துழைப்புடன் சேலம் கோட்டம் அமைவதற்கு பெரும் இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.
ஆனால் அதை முறியடித்து சேலம் ரயில் நிலைய வளாகத்தில், அதிரடியாக சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் தொடங்கப்பட்டது. முதலில் வணிகப்பிரிவு தொடங்கப்பட்டது. இன்று முதல் தனி அதிகாரி நியமிக்கப்பட்டு அவரும் பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து இன்று முதல் சேலம்ரயில்வே கோட்ட அலுவலகம் செயல்பாட்டுக்கு வருவதாக தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள போலோ சிங் தெரிவித்தார்.
இந்த நிலையில் சேலம் கோட்ட அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த தொலைபேசி, ஃபேக்ஸ் ஆகியவற்றை திடீரென ரயில்வே போர்ட்டர்கள் வந்துஎடுத்துச் சென்றனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரயில்வே ஊழியர்கள் எதற்காகஎடுத்துச் செல்கிறீர்கள் என்று கேட்டனர்.
அதற்கு அவர்கள் இவற்றின் இணைப்பைத் துண்டிக்கும்படி பாலக்காடு கோட்டத்திலிருந்து உத்தரவு வந்ததால் துண்டித்தோம். தெற்கு ரயில்வேபொது மேலாளர் தாமஸ் வர்கீஸிடமிருந்து (இவர் மலையாளி) மறு உத்தரவு வரும் வரை கோட்டஅலுவலகப் பணிகளைத் தொடங்கக் கூடாது என்றும் பாலக்காடு அதிகாரிகள் கூறியதாக அவர்கள் தெரிவித்தனர்.
மலையாள அதிகாரிகளின் இந்த அடாவடி, அராஜக, அத்துமீறல் நடவடிக்கை குறித்து ரயில்வே இணை அமைச்சர் வேலுவுக்கு பாமகவினர் தகவல்அனுப்பினர். கடுப்பான வேலு, உடனடியாக எடுத்துச் செல்லப்பட்ட போன், பேக்ஸ் கருவிகளை கொண்டு வந்து வைக்க வேண்டும்,இணைப்புகளையும் உடனடியாக தர வேண்டும் என உத்தரவிட்டார்.
இதுகுறித்து வேலு கூறுகையில், சேலம் ரயில்வே கோட்டம் அமைவதை யாரும் தடுக்க முடியாது. நிச்சயம் அது அமைந்தே தீரும். தற்காலிகஅலுவலகத்தின் பணிகளை தொடங்க உத்தரவிட்டுள்ளேன்.
பாலக்காடு கோட்ட ரயில்வே மூத்த வணிக மேலாளர் உள்ளிட்ட சில அதிகாரிகள் இதுபோல நடந்து கொண்டுள்ளனர். இதுகுறித்து விசாரணைநடத்துமாறு பொது மேலாளர் தாமஸ் வர்கீஸுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
சிறப்பு அதிகாரியாக போலோ சிங் நியமிக்கப்பட்டுள்ளார். மற்ற அதிகாரிகளும் நியமனம் செய்யப்பட உள்ளனர் என்றார் வேலு.
இன்று பொறுப்பேற்றுக் கொண்ட போலோ சிங் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று முதல் சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம்செயல்பாட்டுக்கு வந்துள்ளது. அவசரக் கோட்டா உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் இன்று முதல் சேலத்திலேயே நடைபெறும்.
இன்னும் 6 மாதத்திற்குள் முழுமையான அளவில் சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் செயல்படத் தொடங்கும் என்றார்.
அச்சுவைக் கண்டித்து பாமக போராட்டம் :
இந் நிலையில் சேலம் ரயில்வே கோட்டத்தை எதிர்க்கும் கேரளாவின் போக்கைக் கண்டித்து பாமக சார்பில் வேலூரில் இன்று ஆர்ப்பாட்டம்நடத்தப்பட்டது.
முன்னாள் மத்திய அமைச்சர் என்.டி.சண்முகம் தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான பாமகவினர் கலந்து கொண்டனர்.
தலைமைத் தபால் நிலையம் முன்பு நடந்த போராட்டத்தில் சண்முகம் பேசுகையில், சேலம் கோட்டம் அமைவதை கடுமையாக எதிர்க்கும் கேரளமுதல்வர் அச்சுதானந்தனை வன்மையாக கண்டிக்கிறோம். இந்திய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கேரள அரசு தொடர்ந்துசெயல்பட்டு வருகிறது என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications