சாப்பாடின்றி அலைக்கழிக்கப்பட்ட ஜோஸ்!
கோவை:கோவை வந்திருந்த மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சைபுதீன் ஜோஸுக்கு, மாநில அரசின் சார்பில் சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்யப்படாததால்,அவரும், அவரது செயலாளரும் நள்ளிரவில் ஹோட்டலுக்குப் போய் சாப்பிட வேண்டிய நிலை ஏற்பட்டது.
மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சைபுதீன் ஜோஸ் செவ்வாய்க்கிழமை சென்னை வந்திருந்தார். அன்று மாலை கோவை சென்ற அவர் தமிழ்நாடுவேளாண் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச நிலத்தடி நீர் மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.
இரவு அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார். அமைச்சரின் இரவு சாப்பாடு குறித்து விருந்தினர் மாளிகை நிர்வாகிகளிடம் அமைச்சரின்செயலாளர் விசாரித்தபோது, சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என தங்களுக்கு அரசிடமிருந்து உத்தரவு வரவில்லை என்றுதெரிவித்துள்ளனர்.
இதைக் கேட்டதும் அமைச்சரின் செயலாளர் பெரும் அதிர்ச்சி அடைந்தார். அந்த நேரம் பார்த்து தாசில்தார் ராஜேந்திரன் அங்கு வந்துள்ளார்.அவரைப் பார்த்ததும் கோபமடைந்த அமைச்சரின் செயலாளர், ராஜேந்திரனை கடிந்து கொண்டார்.
மத்திய அமைச்சர் வருகிறார் என்று தெரிந்தும் சாப்பாட்டுக்கு ஏன் ஏற்பாடு செய்யவில்லை என்று கோபமாக கேட்டார். அதற்கு ராஜேந்திரனிடம்பதில் ஏதும் இல்லை.
விருந்தினர் மாளிகையில் சாப்பாடு இல்லை என்று தெரிய வந்ததும், அமைச்சரும், அவரது செயலாளரும்ம் நள்ளிரவு வாக்கில் வெளியில் சென்றுஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டு விட்டு விருந்தினர் மாளிகைக்கு வந்தனராம்.
ஜோஸுக்கு சாப்பாடு செய்து தராதது குறித்த தகவல் தலைமைச் செயலாளர் திரிபாதிக்கு சென்றது. இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மாவட்டஆட்சித் தலைவர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், வேளாண் பல்கலைக்கழக அதிகாரிகளிடம் அவர் விளக்கம் கேட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications