கிருஷ்ணா நீர்: ஆந்திராவுக்கு தமிழகம் கடிதம்
சென்னை:சென்னைக்கு கிருஷ்ணா நீரை வழங்கி வந்த கண்டலேறு அணையை ஆந்திர அரசு மூடி விட்டது. இதனால் கிருஷ்ணா நீர் வருவது தடைபட்டுள்ளது.
தமிழகத்திற்கும், ஆந்திராவுக்கும் இடையே சென்னை நகருக்கு கிருஷ்ணா நீரை வழங்குவது தொடர்பான ஒப்பந்தம் உள்ளது. இந்தஒப்பந்தத்தின்படி ஆண்டுக்கு 12 டிஎம்சி தண்ணீரை ஆந்திரம் வழங்க வேண்டும்.
ஆனால் இதுவரை ஒப்பந்தப்படி ஒரு ஆண்டு கூட தண்ணீர் வந்ததில்லை. கடந்த 4 மாதங்களாக ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்துபூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது. ஜனவரி 31ம் தேதி முதல் கிருஷ்ணா தண்ணீர் நிறுத்தப்பட்டு விட்டது.
தற்போது சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 6.1 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது. இந்தத் தண்ணீரைக் கொண்டு வடகிழக்கு பருவ மழைகாலம் வரை சென்னை நகருக்கு குடிநீர் தட்டுப் இல்லாமல் வழங்க முடியும்.
தற்போது கண்டலேறு அணையில் தற்போது 29 டிஎம்சி தண்ணீர் உள்ளது. எனவே தமிழ்நாட்டுக்கு கூடுதல் தண்ணீரை திறந்து விட வேண்டும் என்றுதமிழ்நாடு அரசு வற்புறுத்தியுள்ளது.
கடந்த 4 மாதங்களில் கண்டலேறு அணையில் இருந்து 5.2 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது கூடுதல்அளவாகும். இந் நிலையில், மேலும் 1.3 டிஎம்சி கிருஷ்ணா தண்ணீரை வழங்க வேண்டும். கண்டலேறு அணையை உடனடியாக திறக்க வேண்டும்என ஆந்திர அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications