கிருஷ்ணா நீர்: ஆந்திராவுக்கு தமிழகம் கடிதம்
சென்னை:சென்னைக்கு கிருஷ்ணா நீரை வழங்கி வந்த கண்டலேறு அணையை ஆந்திர அரசு மூடி விட்டது. இதனால் கிருஷ்ணா நீர் வருவது தடைபட்டுள்ளது.
தமிழகத்திற்கும், ஆந்திராவுக்கும் இடையே சென்னை நகருக்கு கிருஷ்ணா நீரை வழங்குவது தொடர்பான ஒப்பந்தம் உள்ளது. இந்தஒப்பந்தத்தின்படி ஆண்டுக்கு 12 டிஎம்சி தண்ணீரை ஆந்திரம் வழங்க வேண்டும்.
ஆனால் இதுவரை ஒப்பந்தப்படி ஒரு ஆண்டு கூட தண்ணீர் வந்ததில்லை. கடந்த 4 மாதங்களாக ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்துபூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது. ஜனவரி 31ம் தேதி முதல் கிருஷ்ணா தண்ணீர் நிறுத்தப்பட்டு விட்டது.
தற்போது சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 6.1 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது. இந்தத் தண்ணீரைக் கொண்டு வடகிழக்கு பருவ மழைகாலம் வரை சென்னை நகருக்கு குடிநீர் தட்டுப் இல்லாமல் வழங்க முடியும்.
தற்போது கண்டலேறு அணையில் தற்போது 29 டிஎம்சி தண்ணீர் உள்ளது. எனவே தமிழ்நாட்டுக்கு கூடுதல் தண்ணீரை திறந்து விட வேண்டும் என்றுதமிழ்நாடு அரசு வற்புறுத்தியுள்ளது.
கடந்த 4 மாதங்களில் கண்டலேறு அணையில் இருந்து 5.2 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது கூடுதல்அளவாகும். இந் நிலையில், மேலும் 1.3 டிஎம்சி கிருஷ்ணா தண்ணீரை வழங்க வேண்டும். கண்டலேறு அணையை உடனடியாக திறக்க வேண்டும்என ஆந்திர அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
பாலாறு: தமிழக அரசு மீது வைகோ பாய்ச்சல்
பாலாறு அணைப் பிரச்சினை தொடர்பாக தமிழக அரசும், மத்திய அரசும் மக்கள் விரோதப் போக்கில் நடந்து கொள்வதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டினார்.
பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டும் முயற்சியைத் தடுக்காமல் மெத்தனப் போக்குடன் நடந்து வரும் தமிழக அரசு மற்றும் மத்தியஅரசைக் கண்டித்து வேலூரில் நேற்று மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
நிகழ்ச்சியில் வைகோ பேசுகையில், இந்தப் பிரச்சினையில் தமிழக அரசு மிகவும் அலட்சியப் போக்குடன் நடந்து வருகிறது. இது வன்மையாககண்டிக்கத்தக்கது.
தமிழக அரசின் அலட்சியப் போக்கால் வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்க்கைகேள்விக்குறியாகப் போகிறது.
தமிழக மக்களுக்குள தமிழக அரசும், மத்திய அரசும் துரோகம் இழைத்து விட்டன. ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே அணை கட்டினால் அதற்குதிமுக அரசும், மத்திய அரசும்தான் பொறுப்பேற்க வேண்டும்.
பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கான முயற்சிகளை ஆந்திர அரசு எடுத்து வருகிறது. இது திமுக அரசுக்கும் தெரியும். ஆனாலும், மக்களைஏமாற்றும் வகையில் பொய்யாகப் பேசி வருகிறார்கள்.
இதுபோன்ற பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு, ஒரே தீர்வு நதிகளை இணைப்பதுதான். இதைத்தான் மதிமுக நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது.
நதிகளை தேசியமாக்குவது குறித்தத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கையை தாமதிக்காமல் எடுக்க வேண்டும்என்றார் வைகோ.
கிருஷ்ணா நீர்: ஆந்திராவுக்கு தமிழகம் கடிதம்
சென்னைக்கு கிருஷ்ணா நீரை வழங்கி வந்த கண்டலேறு அணையை ஆந்திர அரசு மூடி விட்டது. இதனால் கிருஷ்ணா நீர் வருவது தடைபட்டுள்ளது.
தமிழகத்திற்கும், ஆந்திராவுக்கும் இடையே சென்னை நகருக்கு கிருஷ்ணா நீரை வழங்குவது தொடர்பான ஒப்பந்தம் உள்ளது. இந்தஒப்பந்தத்தின்படி ஆண்டுக்கு 12 டிஎம்சி தண்ணீரை ஆந்திரம் வழங்க வேண்டும்.
ஆனால் இதுவரை ஒப்பந்தப்படி ஒரு ஆண்டு கூட தண்ணீர் வந்ததில்லை. கடந்த 4 மாதங்களாக ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்துபூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது. ஜனவரி 31ம் தேதி முதல் கிருஷ்ணா தண்ணீர் நிறுத்தப்பட்டு விட்டது.
தற்போது சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 6.1 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது. இந்தத் தண்ணீரைக் கொண்டு வடகிழக்கு பருவ மழைகாலம் வரை சென்னை நகருக்கு குடிநீர் தட்டுப் இல்லாமல் வழங்க முடியும்.
தற்போது கண்டலேறு அணையில் தற்போது 29 டிஎம்சி தண்ணீர் உள்ளது. எனவே தமிழ்நாட்டுக்கு கூடுதல் தண்ணீரை திறந்து விட வேண்டும் என்றுதமிழ்நாடு அரசு வற்புறுத்தியுள்ளது.
கடந்த 4 மாதங்களில் கண்டலேறு அணையில் இருந்து 5.2 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது கூடுதல்அளவாகும். இந் நிலையில், மேலும் 1.3 டிஎம்சி கிருஷ்ணா தண்ணீரை வழங்க வேண்டும். கண்டலேறு அணையை உடனடியாக திறக்க வேண்டும்என ஆந்திர அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

Click it and Unblock the Notifications