வேட்பாளர்களை பிடித்து வைத்த விஜய்காந்த்!
சென்னை:அதிமுக, மதிமுக ஆகிய முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் களத்தில் இல்லாததால் தங்களை எதிர்த்துப் போட்டியிடும் சுயேச்சைகள் மற்றும் தேமுதிகவேட்பாளர்களிடம் பேசி அவர்களை விலக வைக்கும் முயற்சியில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது.
அதை நிரூபிப்பது போல பல வார்டுகளில் தேமுதிக, சுயேச்சை வேட்பாளர்கள் விலக முடிவு செய்துள்ளனர். சில இடங்களில் பாஜக வேட்பாளர்களும்கூட விலக முன் வந்துள்ளனராம். இதனால் முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியத்தின் 140வது வார்டு உள்பட பல வார்டுகளில் திமுக வேட்பாளர்கள்போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படும் நிலை உள்ளது.
மா.சுப்பிரமணியத்தின் வார்டில் தேமுதிக வேட்பாள-ரின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. தற்போது தியாகராஜன் என்ற ஒரே ஒருசுயேச்சை வேட்பாளர் மட்டும்தான் களத்தில் உள்ளார். அவரும் போட்டியிலிருந்து விலக ஒப்புக் கொண்டு விட்டாராம்.
135வது வார்டில் திமுக வேட்பாளர் காஞ்சனாவை எதிர்த்து களம் புகுந்த தேமுதிக வேட்பாளர் உமாவின் வேட்பு மனு தள்ளுபடியாகி விட்டது. 2சுயேச்சைகள்தான் உள்ளனர். அவர்களும் விலகப் போகிறார்களாம்.
இதுபோல 86, 91, 127, 138, 139, 141 ஆகிய வார்டுகளில் திமுக வேட்பாளர்களை எதிர்த்துப் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர்களின் மனுக்கள்தள்ளுபடியாகி விட்டன.
11வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் கிருபாகரனை எதிர்த்தும், 20வது வார்டில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ரூப்சந்தரை எதிர்த்தும் மனுதாக்கல் செய்திருந்த தேமுதிக வேட்பாளர்கள் வாபஸ் வாங்கி விட்டனர்.
இப்படி வரிசையாக தே-முதிக வேட்பாளர்களும், சுயேச்சைகளும் வாபஸ் பெற்று வருவதால் பல வார்டுகளில் போட்டியே இல்லாமல் திமுக மற்றும்கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
தனது வேட்பாளர்கள் வரிசை கட்டி போட்டியிலிருந்து விலகி வருவதால் அதிர்ந்து போயுள்ள தேமுதிக தலைவர் விஜய்காந்த் அவர்களை
தனது கட்சியின் தலைமை அலுவலகம் உள்ள ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தில் தங்க வைத்து கண்காணித்து வருகிறார். அவர்களுக்குநேற்றிரவு சப்பாத்தி குருமா வழங்கப்பட்டது.
இன்று காலை இட்லி, பூரியும், மதியம் கோழி பிரியாணியும் வழங்கப்படுமாம். இந்த உணவு ஏற்பாடுகளை கேப்டனின் மச்சானும் கட்சியின்இளைஞரணித் தலைவருமான சுதீஷ் தான் முன்னின்று கவனித்து வருகிறார்.
இன்று மாலை வேட்புமனு வாபஸ் பெறுவதற்கான நேரம் முடிந்த பிறகே வேட்பாளர்களை மண்டபத்தில் இருந்து ரிலீஸ் செய்வார்களாம்.
ஏற்கனவே முறைப்படி மனு தாக்கல் செய்யாத 14 தேமுதிக வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுவிட்டன. இந் நிலையில்மற்றவர்களும் விலகுவதால் தனது இமேஜ், டேமேஜ் ஆகும் என கேப்டன் அஞ்சுகிறார்.
வழக்குகள் பாயும்-விஜயகாந்த் திமுக எச்சரிக்கை
திமுக மீது தொடர்ந்து விஜயகாந்த் திட்டமிட்டு பொய் பழி சுமத்தி வருவதால் அவர் மீது மேலும் வழக்கு தொடரப்படும் என தென் சென்னைமாவட்ட திமக செயலாளர் ஜெ.அன்பழகன் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை மாநகராட்சி மறு தேர்தலில் மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, திமுகவைச் சேர்ந்தவர்கள் கும்பலாக சென்றுதேமுதிக வேட்பாளர்களின் மனுக்களை தள்ளுபடி செய்யுமாறு அதிகா>களை மிரட்டியதாக விஜயகாந்த் மிகப் பெரிய பொய்யைக் கூறியுள்ளார்.
தேமுதிக அறிவித்த வேட்பாளர்களில் 4 பேர் வேட்பு மனுவே தாக்கல் செய்யவில்லை. மேலும் பலர் முறையாக மனு தாக்கல் செய்யவில்லை. 109வதுவட்டத்தில் தேமுதிக வேட்பாளரின் மனுவையும், மாற்று வேட்பாளரின் மனுவையும் ஒரே நபரே முன்மொழிந்திருந்தார்.
இவ்வாறு முறையாக வேட்பு மனு தாக்கல் செய்ய தெரியாதவர்கள், முடியாதவர்களை எல்லாம் வேட்பாளர்களாக அறிவித்து விட்டு அவர்களதுமனுக்கள் தள்ளுபடியானால் இவரது இயலாமையை மறைப்பதற்காக திமுக மீது குறை கூறுகிறார் விஜயகாந்த்.
தேமுதிக வேட்பாளர்களின் மனுக்களில் இருந்த முறைகேடுகளைப் பார்த்து விட்டு கூட வந்த அவர்களது கட்சி வக்கீல்களே பேசாமல் திரும்பிச்சென்று விட்டனர்.
இந் நிலையில் தனது கட்சி வேட்பாளர்கள் மீது நம்பிக்கை இல்லாமல், அவர்களை ஒரு கல்யாண மண்டபத்தில் அடைத்து வைத்து விட்டு திமுகவினர்கத்தியைக் காட்டி வேட்பாளர்களை மிரட்டுவதாக பொய்யாக கூறுகிறார்.
வேண்டும் என்றே திட்டமிட்டு திமுக மீது பழி சுமத்தி வரும் விஜயகாந்த் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார் அன்பழகன்.
அவதூறு கேஸ்-கேப்டன் ஆஜராக உத்தரவு:
இந் நிலையில் ஏற்கனவே திமுக தொடர்ந்துள்ள அவதூறு வழக்கில், வருகிற 21ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு விஜயகாந்த்துக்குசென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வருமான வரி சோதனை தொடர்பாக முதல்வர் கருணாநிதி மீது சரமாரியாக குற்றம் சாட்டியிருந்தார் விஜயகாந்த். இதையடுத்து விஜயகாந்த் மீதுதிமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளரும், அமைச்சருமான ஆற்காடு வீராசாமி, எழும்பூர் தலைமை பெருநகர நீதிமன்றத்தில் அவதூறு வழக்குதொடர்ந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது விஜயகாந்த் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் 21ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம்அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
விஜயகாந்த் தவிர மாலை முரசு நாளிதழ் ஆசிரியர், வெளியீட்டாளர் ஆகியோரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications