சென்னை-மைசூர் ரயில் மீது தாக்குதல் எதிரொலி-கூட்டம் குறைந்தது

Subscribe to Oneindia Tamil

மைசூர்:காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை மத்திய அரசு கெசட்டில் வெளியிடாமல் தடுப்போம் என கன்னட நடிகரும் மாண்டியா தொகுதி எம்பியும் மத்தியஇணையமைச்சருமான அம்பரீஷ் கூறியுள்ளார்.

கெசட்டில் ஒரு தீர்ப்பு வெளியாகிவிட்டால் அதை மத்திய அரசு அமல்படுத்தியாக வேண்டும்.

இந் நிலையில் ரஜினியின் நெருங்கிய நண்பரான அம்பரீஷ் கூறுகையில்,

தமிழகத்துக்கு ஆண்டு தோறும் 192 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பைகெசட்டில் வெளியிடாமல் மத்திய அரசை தடுப்போம். சட்டத்தின் மூலமும் தீர்ப்பை நிறைவேற்றுவதை தடுப்போம்.

தீர்ப்பை கெசட்டில் வெளியிடாமல் இருக்க கர்நாடகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்கள், எம்பிகள் அனைவரும் சேர்ந்து வலியுறுத்துவோம். காவிரிநடுவர் மன்ற தீர்ப்புக்காக மத்திய அரசை குறை கூற முடியாது. காவிரி நடுவர் மன்றத்தீர்ப்பு தொடர்பாக கர்நாடகத்தின் நிலையை பிரதமர்மன்மோகன் சிங்கை சந்தித்து எடுத்து கூறுவேன்.

மழை இல்லாத காலங்களில் நீரைப் பங்கீட்டுக் கொள்வது தொடர்பாக விவசாய விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் அறிக்கையை நடுவர் மன்றம்கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் காந்திய வழியில் போராட்டம் நடத்த வேண்டும் என அவர்கூறினார்.

முன்னதாக மைசூர்-மாண்டியா விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட அம்பரீஷ், காவிரி நடுவர் மன்றத்தீர்ப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் தனது எம்பி பதவியையும் ராஜினாமா செய்வேன் எனவும் மிரட்டல் விடுத்தார்.

சதாப்தியில் கூட்டம் குறைந்தது:

மைசூரில் இருந்து சென்னை வரும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் மீது கர்நாடக விவசாயிகள் தாக்குதல் நடத்தியதையடுத்து நேற்று முதல் அந்த ரயிலில்பயணம் செய்வோரின் எண்ணிக்கை மிகக் கணிசமாகக் குறைந்துவிட்டது.

பெங்களூர் வழியாக சொல்லும் இந்த ரயில் மீது கர்நாடக மாநிலம் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் கர்நாடக விவசாயிகள் தாக்குதல் நடத்தினர். ரயிலைமறித்து நிறுத்தி சராமரியாக கற்களை வீசினர்.

ரயில் என்ஜினின் கண்ணாடி உடைக்கப்பட்டது. அதை தடுக்க முயன்ற டிரைவருக்கு அடி விழுந்தது. மேலும் ரயிலுக்குள்ளும் புகுந்து கண்ணாடிகளைஉடைத்தனர். தமிழ் பயணிகளை நோக்கி தரக்குறைவாக திட்டினர். சிலரை தாக்கவும் செய்தனர்.

இதனால் பயணிகளிடம் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது. இந்த ரயிலுக்கு முன்பதிவு செய்திருந்து பயணிகள் தங்களது டிக்கெட்டை ரத்து செய்துவருகின்றனர்.

இதற்கிடையே தமிழகம், கர்நாடகம் இடையிலான ரயில்களில் கூடுதல் ரயில்வே போலீசார் அனுப்பப்பட்டு வருகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+