கர்நாடகம்-தமிழக அரசு பஸ்களுக்கு அனுமதியில்லைஇரவில் மட்டும் அனுமதிக்கப்படும் தமிழக லாரிகள்
பெங்களூர்:கர்நாடகத்துக்குச் செல்லும் தமிழக அரசு பஸ்கள் தொடர்ந்து 5வது நாளாக ஒசூரிலேயே நிறுத்தப்பட்டு வருகின்றன. இதனால் பயணிகள் தொடர்ந்துபெரும் வேதனையை அனுபவித்து வருகின்றனர்.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பையடுத்து தமிழகத்தில் இருந்து வரும் அரசு பஸ்கள் ஒசூரிலேயே நிறுத்தப்பட்டு வருகின்றன.
அதே நேரத்தில் கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரிக்கு இயக்கப்படும் பேருந்துக்கள் வழக்கம் போலஇயக்கப்பட்டு வருகின்றன. அதே போல தனியார் சொகுசு பஸ்களும் வழக்கம் போல இயக்கப்படுகின்றன.
தமிழக அரசுப் பேருந்துக்களை இயக்கினால் சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என பெங்களூர் ஆட்சியர் மற்றும் காவல்துறை ஆணையர்ஆகியோர் கூறிவிட்டதால் பஸ்கள் பெங்களூருக்குள் நுழைய தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஒசூரில் இறங்கி கர்நாடக பகுதியான அத்திபலே வரை 5 கி.மீ. நடையாய் நடந்து வந்து டவுன் பஸ்களைப் பிடித்து பெங்களூருக்குள் வரவேண்டிய நிலைக்கு பயணிகள் தள்ளப்பட்டுள்ளன.
லாரிகளுக்கு அனுமதி:
இந் நிலையில் 3 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமிழக லாரிகள் நேற்று நள்ளிரவு கர்நாடகாவிற்குள் நுழைய அனுமதி அளிக்கப்பட்டது. 12மணி முதல் 2 மணி வரை மட்டுமே லாரிகள் செல்ல தமிழக போலீஸார் அனுமதித்தனர்.
முதலில் வட மாநில லாரிகள் அனுமதிக்கப்பட்டன. பின்னரே தமிழக லாரிகள செல்ல அனுமதிக்கப்பட்டன. ஆனாலும் சில லாரிகளேகர்நாடகத்துக்குள் நுழைந்தன. பெரும்பாலான லாரி உரிமையாளர்களும் டிரைவர்களும் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை.
இதனால் ஒசூரில் ஆரம்பித்து பல கிமீ தூரத்துக்கு லாரிகள் வரிசை கட்டி நின்று கொண்டுள்ளன.
கடந்த 4 நாட்களாக லாரி போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் தமிழக எல்லைப் பகுதியில் ரூ. 1,000 கோடி மதிப்புள்ள சரக்குகள் தேங்கிகிடப்பதாகத் தெரிகிறது.
இதற்கிடையில் வாகனங்கள் அனுமதி குறித்து சேலம் சரக டிஐஜி அலெக்சாண்டர் மோகன் கூறுகையில், பெங்களூர் போலீசார் சகஜ நிலை திரும்பிவிட்டதாக கூறினர். இதனால் தமிழ்நாடு பாாேலீசார் பெங்களூர், மைசூர் என 100 கி.மீ தூரம் கர்நாடகாவுக்கு சென்று அங்குள்ள நிலை குறித்துஆய்வு செய்தனர்.
ஆனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு இருப்பதாக தெரியவில்லை. மாண்டியா பகுதியில் அசாதாரண நிலை நீடிக்கிறது. இதை நம்பி இப்போதைக்குஎந்த முடிவும் எடுக்க முடியாது. 12ம் தேதி கர்நாடகாவில் பந்த் நடக்க உள்ளது. அதுவரை தமிழக வாகனங்களை கர்நாடகாவிற்குள் அனுமதிப்பதுகுறித்து இப்போதைக்கு அதிகாரப்பூர்வ முடிவுகள் எதுவும் இல்லை என்றார்.
தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் செங்ககோடன் கூறுகையில், கர்நாடகாவுக்கு செல்லும் லாரிகள் இரவு நேரங்களில் வழக்கம்போல இயங்கி வருகின்றன. பகல் நேரத்தில் மட்டும் டிரைவர்கள், லாரிகளை ஆங்காங்கே நிறுத்தி கொள்கின்றனர். இதனால் தமிழக லாரிகளுக்குபாதிப்பு ஏதுமில்லை என்றார்.
சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது:
தொடர்ந்து 5வது நாளாக தமிழக பேருந்துக்கள் கர்நாடகாவுக்கு இயக்கப்படததால் தமிழகம் வரும் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது.
ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்று சுற்றுலா பகுதிகளுக்கு தினமும் கர்நாடகாவில் இருந்து ஏராளமானோர் வருவது வழக்கம். ஏற்காட்டிற்குவரும் சுற்றுலா பயணிகளில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள்.
கடந்த 5 நாட்களாக பேருந்துக்கள் இயக்கப்படாததால் இங்கு சுற்றுலாப்பயணிகளின் வருகை குறைந்து உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications