சென்னை தேர்தல்: 33 பேர் அன் அப்போஸ்டுதேர்வு-மீண்டும் மாநகராட்சியை கைப்பற்றிய திமுக
சென்னை:சென்னை மாநகராட்சி மறு தேர்தலில் முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் உள்பட 33 பேர் போட்டியின்றித் தேர்வு பெற்றனர். இதன் மூலம்மாநகராட்சியை திமுக மீண்டும் கைப்பற்றிவிட்டது.
![]() |
மாநகராட்சியின் 100 வார்டுகளுக்கு வரும் 18ம் தேதி மறு தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக தாக்கல் செய்யப்பட்டிருந்தவேட்பு மனுக்கள் கடந்த 6ம் தேதி பரிசீலிக்கப்பட்டந.
7 மற்றும் 8 ஆகிய இரு நாட்களுக்குள் வேட்பு மனுக்களை வாபஸ் பெற வேண்டும். நேற்று மாலை வரை 33 பேர் வேட்பு மனுக்களை வாபஸ்பெற்றுவிட்டனர். இதன் மூலம் முன்னாள் திமுக மேயர் மா.சுப்பிரமணியனின் வார்டு உள்பட 33 வார்டுகளில் போட்டியிட்ட திமுக கூட்டணிவேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுவிட்டனர்.
இவர்களில் திமுகவினர் 24 பேர், காங்கிரஸ் 6, பாமக 3 ஆவர்.
மாநகராட்சியில் ஏற்கனவே திமுக கூட்டணிக்கு 55 கவுன்சிலர்கள் உள்ளனர். இப்போது மேலும் 33 பேர் போட்டியின்றி தேர்வானதால் இக்கூட்டணியின் பலம் 88 ஆக உயர்ந்துவிட்டது. மாநகராட்சியை கைப்பற்ற 78 கவுன்சிலர்களின் பலமே போதுமானது என்பதால் மீண்டும் சென்னைமாநகராட்சி திமுக வசம் வந்துவிட்டது.
போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் விவரம்:
திமுக:
வார்டு எண் 8 - டன்லப் ரவி, 56 - லதாவாசு, 68- வசந்தி பரமசிவம், 74- ரமேஷ், 76 - சுமதி, 79 -அஞ்சலி தேவி, 81- மதன் மோகன், 84-மதிவாணன், 86 -சுரேஷ் குமார், 91 -தீபா, 92 -லலிதா, 104-எழிலரசன், 110- லில்லி சமாதானம், 111-செல்வி, 113- அன்புதுரை, 119-ராஜம், 120 -மணி, 127 -கருணாநிதி, 129 -முத்துவேல், 135- காஞ்சனா, 138- மேரி லூர்துசாமி, 13 9- மகேஷ் குமார், 140 - மா.சுப்ரமணியன், 141 - கென்னடி.
காங்கிரஸ்:
11 - கிருபாகரன், 20 - ரூப்சந்தர், 70 - சுரேஷ்பாபு, 109 -ஜானகி, 117 - விஸ்வநாதன், 123 -ஜெயகலா பிரபாகர்.
பாமக:
80 - ஏழுமலை, 134 - சத்தியமூர்த்தி, 137 - பிரேமா சக்கரபாணி.
போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்ட மா.சுப்ரமணியன் உள்ளிட்ட 33 பேருக்கும் நேற்று மாலை வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
மீதமுள்ள 67 வார்டுகளுக்கு மட்டும் 18ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். 20ம் தேதி ஒட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும்.
தேமுதிக, பாஜக மற்றும் சுயேச்சை வேட்பாளர்களை மிரட்டியும், பண ஆசை காட்டியும் திமுகவினர் வேட்பு மனுக்களை வாபஸ் பெற வைத்தனர்என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் பாஜக தலைவர்கள் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.
அதிமுகவும் மதிமுகவும் இந்தத் தேர்தலில் போட்டியிடவே இல்லை. தேர்தலை புறக்கணித்துவிட்டன.
மேயர் பதவிக்கு மீண்டும் மா.சுப்பிரமணியமே நிறுத்தப்படுவார் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications