நடிகையிடம் தேமுதிகவினர் ராத்திரி ராவடி
நாகர்கோவில்:கன்னட நடிகை மற்றும் துணை நடிகைகளிடம் ஆபாசமாகப் பேசி கலாட்டா செய்த தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களால் நாகர்கோவிலில்பரபரப்பு ஏற்பட்டது.
என்.எஸ்.ராஜா என்பவர் அன்றில் பறவைகள் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை நெல்லை, குமரி மாவட்டங்களின் பல்வேறுபகுதிகளில் படமாக்கி வருகின்றனர். இதற்காக நாகர்கோவில் வேப்பமூட்டு பகுதியில் உள்ள ஹோட்டலில் தங்கி ஷூட்டிங் நடத்தி வந்தனர்.
![]() |
இப்படத்தில் கன்னட நடிகை சோனியா ஷெட்டி நடிக்கிறார். ராஜாதான் ஹீரோவும். வேப்பமூட்டு ஹோட்டலில் துணை நடிகைகள் மற்றும் நடனநடிகைகள் தங்கியுருந்தனர். செட்டிக்குளம் பகுதியில் உள்ள ஹோட்டலில் சோனியா ஷெட்டி, ஒளிப்பதிவுக் குழுவினர் தங்கியிருந்தனர்.
இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக சோனியா ஷெட்டி, துணை நடிகைகள், நடன அழகிகள் தங்கியிருந்த அறைகளின் கதவுகள் நள்ளிரவில்தட்டப்பட்டன. தொடர்ந்து இதுபோல இரவு தோறும் கதவு தட்டப்பட்டதால் சோனியா உள்ளிட்டோர் அதிர்ச்சி அடைந்தனர், பீதியடைந்தனர்.
இதுகுறித்து இயக்குநர் ராஜாவிடம் புகார் கொடுத்தனர். இந்த நிலையில், படப்பிடிப்பு முடிந்து புதன்கிழமை இரவு திரும்பிய நடிகைகள் ஹோட்டல்வராண்டாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது குடிபோதையில் நான்கு பேர் அங்கு வந்தனர். நடிகைகளை கிண்டலடித்து, கேலி பேசி கலாட்டா செய்தனர். மேலும், நடிகைகளின்அழகை ஆபாசமாக வர்ணித்தும் ஆபாசமாக பேசினர். சிலர் நடிகைகளின் கையைப் பிடித்து இழுத்தும் ராவடி செய்தனர்.
இதையடுத்து அவர்களை படப்பிடிப்புக் குழுவினர் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் போலீஸுக்குத் தகவல் பறந்தது. போலீஸார் விரைந்து வந்துஅவர்களைப் பிடித்து விசாரித்தபோது நான்கு பேரும் தேமுதிகவைச் சேர்ந்தவர்கள் என்பதும், மாவட்ட அளவில் முக்கியப் பொறுப்புகளில்இருப்பவர்கள் என்றும் தெரிய வந்தது.
நடிகைகளின் கதவுகளைத் தட்டி தொல்லை செய்து, கலாட்டாவில் ஈடுபட்டது, கேப்டன் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதை அறிந்ததும் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். இதை பெரிதுபடுத்த விரும்பாத அவர்கள், கலாட்டா செய்தவர்கள் மீது போலீஸில் புகார் கொடுக்காமல்,எச்சரித்து மட்டும் அனுப்பி விடுங்கள் என்று கேட்டுக் கொண்டனர்.
இதையடுத்து கலாட்டா செய்த தேமுதிக கும்பலை கடுமையாக எச்சரித்து போலீஸார் அனுப்பி விட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications