குவைத்: குறைந்த கட்டணத்தில் விமான பயணம்
துபாய்:குறைந்த கட்டணத்தில் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு விமான பயணம் என்ற சலுகையை அறிவித்ததைத் தொடர்ந்த குவைத்தின் ஜஸீராஏர்வேஸ் நிறுவனத்தை ஆயிரக்கணக்கான பேர் முற்றுகையிட்டு டிக்கெட் கேட்டதால் அந்த நிறுவனத்தின் பணிகள் ஸ்தம்பித்தன.
குவைத்தைச் சேர்ந்த ஜஸீரா ஏர்வேஸ் என்ற தனியார் விமான நிறுவனம் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு குறைந்த கட்டணத்தில் (துபாயிலிருந்துஇந்தியாவுக்கு வர 48 தினார் மட்டுமே!) விமான பயண சலுகையை அறிவித்தது. மார்ச் 1ம் தேதி முதல் அக்டோபர் 27ம் தேதி வரை இந்தசலுகையைப் பெறலாம் என அந்த நிறுவனம் அறிவித்தது.
பத்து லட்சம் பேருக்கு இந்த பயண சலுகைத் திட்டம் அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பேர் விமானநிறுவனத்தின் கால் சென்டர்களை போனில் தொடர்பு கொண்டு டிக்கெட் புக்கிங் செய்ய விருப்பம் தெரிவித்தனர்.
ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் போன் செய்ததால், ஜஸீரா நிறுவனத்தின் பணிகள் பாதிக்கப்பட்டு, கால் சென்டர்கள் ஸ்தம்பித்துப் போயின.
இதேபோல ஜஸீரா ஏர்வேஸ் நிறுவனத்தின் இணைய தளத்தையும் ஆயிரக்கணக்கானோர் முற்றுகையிட்டதால் அதன் சர்வரும் ஸ்தம்பித்தது.
துபாயிலிருந்து பல்வேறு நாடுகளுக்கும் மிகவும் குறைந்த கட்டணத்தில் விமான சேவையை நடத்தி வரும் ஒரே நிறுவனம் ஜஸீரா ஏர்வேஸ்தான்என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் டெல்லி, மும்பை, கொச்சி ஆகிய நகரங்களுக்கு துபாயிலிருந்து இந்த நிறுவனம் விமானங்களை இயக்குகிறது. குறைந்த விலைக்கட்டண சலுகைத் திட்டத்தின் கீழ் வருகிற ஜூலை மாதம் வரைக்கும் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு விட்டதாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications