கருணாநிதி கர்நாடகத்தை ஆதரிக்கிறார்-ஜெ பகீர்
சென்னை:காவிரி தண்ணீர் வேண்டும் என்பது வெறும் கோரிக்கை வார்த்தை அல்ல, அது தமிழக மக்களின் வாழ்க்கை என்று அதிமுக பொதுச் செயலாளர்ஜெயலலிதா கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு வந்தவுடன் இது குறித்து நான் அறிக்கை வெளியிட்டேன். அதில் இடைக்காலத் தீர்ப்பில் கூறப்பட்டதைவிட 20 டிஎம்சிநீர் குறைவாகவே தமிழகத்துக்கு கிடைத்திருக்கிறது என்பதை சுட்டிக் காட்டினேன். ஆனால், அதை கருணாநிதி மகிழ்ச்சியான தீர்ப்பு என்றுகூறியிருந்தது வருந்ததத்தக்கது என்றும்
மத்திய அரசை வலியுறுத்தி மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் தாவா சட்டம் 1956ல் கண்டுள்ளபடி மத்திய அரசிதழில் (கெஜட்) தீர்ப்பைவெளியிட செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்,
அதே சமயத்தில் உச்ச நீதிமன்றத்தை அணுகி அதிக நீரைப் பெற முனைப்புடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தேன்.
ஆனால், என் அறிக்கையை சரியாகக் கூட படித்து புரிந்து கொள்ளாத கருணாநிதி எனக்கு பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஆறுதல்தருகிறது என்று சொன்னதைத் தான் மகிழ்ச்சி தருகிறது என்று நான் (ஜெ) சொன்னதாக குறிப்பிட்டுள்ளார். இரண்டுக்கும் ஒன்றும் அதிகவித்தியாசமில்லை.
மொத்தத்தில் இந்த தீர்ப்பை அவர் எதிர்க்கவில்லை. டெல்லியில் நிருபர்களிடம் பேசும்போது கூட இப்போதாவது நியாயம் கிடைத்தது என்று ஆறுதல்அடைவதாகக் கூறியிருக்கிறார்.
அடுத்ததாக, நமக்கு இடைக்காலத் தீர்ப்பில் கூறப்பட்டதை விட இறுதித் தீர்ப்பில் 20 டிஎம்சி குறைவாகக் கிடைத்திருக்கும் உண்மையை நான்சொன்னதை ஏற்க மனமில்லாமல், நமக்கு 210 டிஎம்சி கிடைக்கும் என்று சப்பை கட்டு கட்டி கர்நாடகத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.
தீயில் இட்ட நெய் திரும்பி வருமா என்பதை கருணாநிதியும் இந்த தீர்ப்பை வரவேற்பவர்களும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கர்நாடகம்தமிழ்நாட்டுக்கு எவ்வளவு நீர் தருகிறது என்பது தான் கேள்வி. அது தான் பிரச்சனை. தமிழக எல்லைக்குள் காவிரியில் எவ்வளவு நீர் பாய்கிறதுஎன்பது கேள்வி அல்ல.
திமுக கூட்டணியில் உள்ள பாமக கூட 205 டிஎம்சிக்கும் குறைவாகவே நீர் கிடைத்திருப்பதாக கூறியுள்ளது. காங்கிரசுக்கு கர்நாடகத்தில் அடித்தளம்இருப்பதால் இந்த பிரச்சனையில் பட்டும் படாமலும் பேசுகிறார்கள். இதே வேலையைத் தான் கம்யூனிஸ்டுகளும் ஏன் கருணாநிதி கூட கர்நாடகமக்களுக்கு சாதகமாகவே நடந்து கொள்கிறார்.
காவிரி தண்ணீர் வேண்டும் என்பது வெறும் கோரிக்கை வார்த்தை அல்ல, அது தமிழக மக்களின் வாழ்க்கை என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications