கருணாநிதி மீது டிராபிக் ராமசாமி புது வழக்கு
சென்னை:நீதிபதிகள் குறித்த விமர்சனம் தொடர்பாக முதல்வர் கருணாநிதி, அமைச்சர் ஆற்காடு வீராசாமி ஆகியோரிடம் விளக்கம் கேட்க வேண்டும் என்றுகோரி சென்னையைச் சேர்ந்த டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னை நகர மக்களுக்கு மிகவும் பரிச்சயமானவர் டிராபிக் ராமசாமி. சென்னை நகரின் போக்குவரத்து அலங்கோலங்கள், அவலங்களை எதிர்த்துஇவர் நூற்றுக்கணக்கான பொது நலன் மனுக்களைப் போட்டு மக்களுக்குப் பேருதவி புரிந்துள்ளார்.
நடைபாதை ஆக்கிரமிப்பு, போக்குவரத்து வசதி உள்ளிட்ட போக்குவரத்து சம்பந்தமான வழக்குகளை அதிக அளவில் போட்டதாலிதான் இவருக்குடிராபிக் ராமசாமி என்ற பெயர் வந்தது.
வழக்கு போடுவதோடு நில்லாமல், தான் செல்லும் இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டாலோ அல்லது பாதிப்பு ஏற்பட்டாலோ, சட்டென்றுசாலையில் இறங்கி போக்குவரத்தை சரி செய்வதும் இவரது அன்றாட கடமைகளில் ஒன்று.
எப்போதும் சட்டைப் பை நிறைய பேனாக்களையும், பேப்பர்களையும் வைத்துக் கொண்டுதான் வீட்டை விட்டே இவர் வெளியே வருவார்.பொதுமக்களுக்காகவே வாழ்ந்து கொண்டுள்ள ஒரு நவீன தியாகி டிராபிக் ராமசாமி.
இவரது போக்கால் ஆத்திரமுற்ற பலர் ஆள் வைத்தும் இவரை அடித்துள்ளனர். இதையடுத்து இவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு தரசென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி தற்போது போலீஸ் பாதுகாப்புடன் ராமசாமி சென்னை நகரில் நடமாடி வருகிறார்.
அவர் தற்போது முதல்வர் கருணாநிதி, ஆற்காடு வீராசாமி ஆகியோர் நீதிபதிகள் குறித்து தெரிவித்த கருத்து தொடர்பாக அவர்களிடம் விளக்கம்கேட்க வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், முதல்வர் கருணாநிதியும், அமைச்சர் ஆற்காடு வீராசாமியும், அரசு அமைப்பதற்கு முன்பு ஆளுநர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம்செய்தவர்கள். இந்திய அரசியல் சாசனத்தை பின்பற்றுவதாக உறுதி அளித்தனர்.
ஆனால் கடந்த 5ம் தேதி நடந்த ஒரு திருமண விழாவில் இந்த சத்தியப் பிரமாணத்துக்கு எதிராக இருவரும் பேசியுள்ளனர். இதுதுரதிர்ஷ்டவசமானது.
நீதித்துறையை மட்டுமல்லாது நீதிபதிகளையும் கடுமையாக விமர்சித்துள்ளனர். கோர்ட் நடவடிக்கைகளில் தலையிடுவது என்பது நீதிபதிகளைஎச்சரிப்பது போலாகும்.
கட்டப் பஞ்சாயத்து செய்யக் கூடாது, எல்லை தாண்டக் கூடாது என்று கடுமையாக பேசியுள்ளனர். இது ஜனநாயகத்திற்கு ஆபத்தைஏற்படுத்துவதாகும். அதுமட்டுமல்லாது, நீதிபதிகளின் கண்ணியத்துக்கும் இழுக்கு ஏற்படுத்தி விடும்.
இதுபோன்ற கருத்துக்களை வெளியிட்டதில், ஆற்காடு வீராசாமி பேசியதில் உள்நோக்கம் உள்ளது. அவரது செயல் பெரிய தண்டனைக்குரியகுற்றமாகும்.
இந்த கருத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கோரி 2 பேருக்கும் நான் பேக்ஸ் மூலம் கோரிக்கை விடுத்தேன். ஆனால் பதில்இல்லை.
எனவே இவர்கள் இருவரிடமும், எந்த்த தகுதியின் அடிப்படையில் உங்களது முதல்வர் மற்றும் அமைச்சர் பதவியில் நீடிக்கிறீர்கள் என்று விளக்கம்கேட்டு வாரண்டோ நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார் ராமசாமி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications