சென்னையில் 31 சிறப்பு பொருளாதர மண்டலங்கள்
சென்னை:சென்னையைச் சுற்றிலும் 31 சிறப்பு பொருளாதார மண்டலங்களை உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது மொத்தம் 7 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உள்ளன. இவற்றில் முக்கியமானது தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர், மறைமலைநகர் ஆகியவை ஆகும்.
இதில் தாம்பரம்தான் (மெப்ஸ்) மிகப் பழமையான சிறப்புப் பொருளாதார மண்டலம் ஆகும். நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் இங்கு உள்ளன,15,000 மேற்பட்டோர் இங்கு பணியாற்றி வருகின்றனர்.
தாம்பரம் சிறப்புப் பொருளாதர மண்டலம் ஆண்டுக்கு கிட்டத்தட்ட ரூ. 2,000 கோடி அளவுக்கு ஏற்றுமதி மூலம் வருவாய் ஈட்டி வருகிறது.
இதேபோல மேலும் பல சிறப்புப் பொருளாதார மண்டலங்களை தமிழகம் முழுவதும் உருவாக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. மொத்தம் 45இடங்களில் இந்த சிறப்புப் பொருளாதர மண்டலங்கள் அமையவுள்ளன.
இதில் சென்னையில் மட்டும் 31 மண்டலங்கள் அமைக்கப்படவுள்ளன. இவை அனைத்தும் சென்னையைச் சுற்றிலும் உள்ள புறநகர்ப் புகுதிகளில்அமைக்கப்படவுள்ளன. இதற்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன.
இதேபோல மதுரை, கோவை, திருச்சி, ஓசூர், தூத்துக்குடி ஆகிய இடங்களிலும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமையவுள்ளன.
மத்திய அரசின் வர்த்தகத் துறையிடம் இதுதொடர்பான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அத்துறையின் அனுமதி கிடைத்தவுடன் சிறப்புப்பொருளாதார மண்டலங்கள் அமைக்கும் பணி முழு வீச்சில் முடுக்கி விடப்படும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications