காதலி..கனடா.. போலி விசா: வாலிபர் கைது
சென்னை:போலி விசா மூலம் காதலியை சந்திக்க கனடாவுக்கு செல்ல முயன்ற இலங்கை வாலிபர் சென்னை விமான நிலையத்தில் பிடிப்பட்டார்.
கொழும்புவை சேர்ந்த நிதர்சன் ஜோசப்(26), நிரூபமா(22) இருவரும் காதலர்கள். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மேற்படிப்புக்காக லண்டன் சென்றார்ஜோசப்.
கடந்த 6 மாதங்களாக நிரூபமாவை தொடர்பு கொள்ள முடியாததால் கவலை அடைந்த ஜொசப் படிப்பை கைவிட்டு கொழும்பு திரும்பினார்.அப்போது நிரூபமா கனடாவிற்கு சென்றிருப்பது தெரியவந்தது.
அவரது கனடா முகவரி மற்றும் செல் நம்பரை கண்டுபிடித்த ஜோசப், நிரூபமாவுடன் தொடர்பு கொண்டு, உடனே இலங்கைக்கு வரச் சொல்ல,அவரோ தனக்கு ஒரு நல்ல வேலை கிடைத்திருப்பதாகவும் 5 ஆண்டுகளுக்கு கனடாவை விட்டு வர முடியாது எனவும் கூறியிருக்கிறார்.
இதையடுத்து தன் லண்டன் படிப்பை கைவிட்ட ஜோசப், இலங்கையில் இருந்து கனடா செல்ல விசா கிடைக்காததால் , 15 நாட்களுக்கு முன் சென்னைவந்து, டிராவல் ஏஜென்சி மூலம் ரூ. 2 லட்சம் கொடுத்து போலி விசா பெற்றார்.
நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு இலங்கை செல்லும் ஏர் லங்கா விமானத்தில் கொழும்பு சென்று, அங்கிருந்து கனடா செல்ல முயன்றார்.மீனம்பாக்கம் விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனையிட்டபோது, ஜோசப்பின் விசா மீது சந்தேகம் ஏற்பட்டதால் அவரை பயணிக்கவிடவில்லை.
பின்பு கனடா தூதரகத்திடம் விசாரித்ததில், அது போலி விசா என தெரிய வந்தது. இதையடுத்து விமான நிலைய போலீஸில் புகார் கொடுத்துஜோசப்பை ஒப்படைத்தனர். போலி விசா வைத்திருந்தற்காக ஜோசப்பை கைது செய்து, 15 நாள் புழல் சிறையில் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு மத்திய குற்றப் பிரிவு போலீஸாருக்கு மாற்றப்பட்டு, போலி விசா வழங்கியவர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications