கோட்டம்-கோவை, சேலத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம்
சென்னை:சேலம் ரயில்வே கோட்டத்தை அமைப்பதை எதிர்க்கும் கேரள அரசைக் கண்டித்தும், கோவை, சேலம் உள்ளிட்ட பகுதிகளை தொடர்ந்து புறக்கணித்துவரும் மத்திய அரசையும், அதைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் மாநில அரசையும் கண்டித்து 11 மற்றும் 12 ஆகிய நாட்களில் சேலம் மற்றும்கோவையில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
கோவை மாவட்டத்திற்கும், வட மாநிலங்களுக்கும் இடையிலான வர்த்தகத் தொடர்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றன.ஆனால் ரயில்வே துறையோக கோவையை முற்றிலும் புறக்கணித்துக் கொண்டே இருக்கிறது.
தென்னக ரயில்வேயில் ஒலவக்கோடு (பாலக்காடு) என்ற இடத்தைத் தலைமையிடமாகக் கொண்டு நீண்ட காலமாக ரயில்வே கோட்டம் இயங்கிவந்துள்ளது. இதன் பெரும் பகுதிகள் கோவை, சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களை உள்ளடக்கியது.
கேரளப் பகுதியைச் சேர்ந்த நிலப்பரப்பு மிக மிக குறைவு. ஆனால் இக்கோட்டத்தின் பயன்கள், வசதிகள் அனைத்துமே கேரளாவுக்கே போய்ச்சேருகின்றன. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ஒலவக்கோடு கோட்டத்தை இரண்டாகப் பிரித்து ஒரு கோட்டத்தை சேலத்தைத்தலைமையிடமாகக் கொண்டு உருவாக்க 2 ஆண்டுகளுக்கு முன்பு தீர்மானிக்கப்பட்டது.
அதற்கான ஆயத்தப் பணிகள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டன. இதற்கான அலுவலகம் அமைக்கப்பட்டு, அலுவலர்கள்,பணியாளர்கள் நியமிக்கப்பட்டும், கடந்த 15 நாட்களாக கேரள கம்யூனிஸ்ட் அரசு இதற்கான எதிர்ப்பு வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது.
இந்தப் போராட்டங்களுக்கு கேரள முதல்வரும், மாநில அரசும் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
பாலக்காடு கோட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய நகரங்கள்தான் அதிக வருவாயை ஈட்டித் தருகின்றன. ஆனால் நகராட்சிஅந்தஸ்தில் உள்ள பாலக்கோட்டில் கோட்ட அலுவலகம் உள்ளது.
பாலக்காடு ரயில் நிலைய வசதிகளைப் பார்க்கும்போது, கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு ரயில் நிலையங்கள் மிக மிகக் குறைவான வசதிகளுடன்உள்ளன.
அதுமட்டுமல்லாமல், பாலக்காடு ரயில் நிலையமும், கேரளத்திற்குள் வரும் பாலக்கோடு கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்களும் மாதிரிநிலையங்கள் என்ற அளவில் மிகச் சிறப்பாக பராமரிக்கப்படுகின்றன.
வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில் நிலையங்கள் கேரளாவின் ஏதாவது ஒரு சிறு நகரத்தில் நின்று செல்லும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இப்படி தென்னக ரயில்வேகுக்கு வருவாய் ஈட்டித் தரும் நகரங்களாக கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு ஆகியவை இருந்தும் அந்தநகரங்களுக்கான ரயில் திட்டங்கள் முழுமையாக புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளன.
எனவே இந்த நீண்ட காலப் பிரச்சினைக்கு முடிவு கட்ட சேலம் ரயில்வே கோட்டை முழுமையாக, விரைவாக அமல்படுத்த வேண்டும்.
கோவை மாவட்டத்தில் புறக்கணிப்பட்டு வரும் ரயில்வே திட்டங்களை விரைவு படுத்த வேண்டும். நிலுவையில் உள்ள ரயில்வே மேம்பாலகட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
இவற்றைக் கண்டுகொள்ளாமல் இருக்கும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து வருகிற 11ம் தேதி சேலத்திலும், 12ம் தேதி கோவையிலும் கண்டனஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.
சேலம் போராட்டத்திற்கு செம்மலை தலைமை தாங்குவார். கோவை போராட்டத்திற்கு செங்கோட்டையன் தலைமை தாங்குவார் என்று கூறியுள்ளார்ஜெயலலிதா.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications