துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு கோரும் தேமுதிக!
சென்னை:சென்னை மாநகராட்சி மறு தேர்தலில் போட்டியிடும் 67 வேட்பாளர்களும் தங்களுக்கு தேர்தல் முடியும் வரை துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை மாநகராட்சியின் 100 வார்டுகளுக்கு நடைபெறவிருந்த மறு தேர்தலில் 33 வார்டுகளுக்கு போட்டியின்றி கவுன்சிலர்கள் தேர்வுசெய்யப்பட்டு விட்டனர். மீதமுள்ள 67 வார்டுகளுக்கு வருகிற 18ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த 67 வார்டுகளிலும் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்கள் கும்பலாக மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்றனர். அங்கிருந்த தேர்தல் ஆணையஅதிகாரிகளை சந்தித்து, 11ம் தேதி முதல் நாங்கள் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளோம். தேர்தல் முடியும் வரை எங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ்பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி மனு கொடுத்தனர்.
இதன் பின்னர் மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கும் சென்று அங்கும் இதேபோல ஒரு மனுவைக் கொடுத்தனர். பின்னர் அவர்கள்செய்தியாளர்களிடம் கூறுகையில் திமுகவினரால் எங்களுக்கு கொலை மிரட்டல்கள் வருகின்றன. எனவேதான் பாதுகாப்பு கோரி மனுசெய்துள்ளோம் என்றனர்.


Click it and Unblock the Notifications
