அதிமுகவின் மலர்ப் பாதை: திமுக கண்டனம்
சென்னை:சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் செல்லும் பாதையில் மலர்களைத் தூவிய அதிமுக வழக்கறிஞர்களின் செயல் மிகவும் கண்டனத்துக்குரியதுஎன்று திமுக பொருளாளரும், அமைச்சருமான ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.
உயர்நீதிமன்ற நீதிபதிகளை கடுமையாக விமர்சித்த ஆற்காடு வீராசாமிக்கு எதிர்ப்பு தெ>விக்கும் வகையில், சென்னை உயர்நீதிமன்ற அதிமுகவழக்கறிஞர்கள் பல்றுே வகையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதில் ஒன்றாக நீதிபதிகள் நடந்து வரும் பாதையில், மலர்களைத் தூவியிருந்தனர். இது குறித்து ஆற்காடு வெளியிட்டுள்ள அறிக்கையில், நீதிமன்றவளாகத்தில் அதிமுக வழக்கறிஞர்கள் செய்துள்ள இந்த செயல் கண்டனத்துக்குரியது. பொதுமக்கள் இந்தப் போராட்டத்தைப் பார்த்துகுழப்பமடைந்துள்ளனர்.
உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் போராட்டங்கள் நடத்தக் கூடாது என தடை உள்ளது. இந்த நிலையில் அதிமுக வக்கீல்கள் மேற்கொண்டுள்ளபோராட்டம் தொடர்பாக அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்பதை அறிய மக்கள் ஆர்வமாக உள்ளனர்.
500 கிலோ பூக்களை ரூ. 20,000 ஆயிரம் கொடுத்து வாங்கி அவற்றை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் தூவியுள்ளனர்.
இதுதொடர்பாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷாவின் கவனத்திற்கு வழக்கறிஞர் முத்துராமலிங்கம் என்பவர் எடுத்துச் சென்றுள்ளார்.இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை நீதிபதி உறுதியளித்துள்ளார்.
தங்களது தலைவி ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அவர் கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சிகளில் அவர் நடக்கும் பாதையில் மலர்களைத் தூவும்கலாச்சாரத்தை இப்போது உயர்நீதிமன்றத்துக்குள் கொண்டு வந்துள்ளனர் அதிமுகவினர்.
ஜனநாயக நாட்டில் இது மிகவும் அசிங்கமான ஒரு நிகழ்ச்சி. சர்வாதிகார நாடுகளில் கூட நீதிமன்றங்களில் இதுபோன்று நடந்ததாக வரலாறு இல்லைஎன்று கூறியுள்ளார் வீராசாமி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications