தமிழகத்திற்குள் ஊடுறுவி கன்னடர்கள் ஆர்ப்பாட்டம்
ஓசூர்:தமிழக, கர்நாடக எல்லையில், ஓசூர் அருகே உள்ள ஜூஜூவாடி பகுதியில் தமிழக எல்லைக்குள் ஊடுறுவி கன்னட அமைப்பினர் போராட்டம்நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை தமிழக போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகத்தில் பல்வேறு கன்னட அமைப்புகள், விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர்ந்துநடந்து வரும் போராட்டத்தால், தமிழகத்திலிருந்து கர்நாடகத்திற்ககுள் வாகனப்போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்குள் ஊடுறுவி போராட்டம் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்புஏற்பட்டது.
ஓசூர் அருகே உள்ள அத்திபலே கர்நாடக எல்லையில் உள்ளது. தமிழக எல்லையில் உள்ள பகுதி ஜூஜூவாடி. இந்த இரு பகுதிகளுக்கும் இடையேபெரிய வளைவு (ஆர்ச்) ஒன்று உள்ளது. இந்தப் பகுதியில் நேற்று கன்னட ஜிகுர்த்தி வேதிகே என்ற அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர்கூடினர்.
மேல் சட்டை அணியாமல், அரை நிர்வாண அலங்கோலத்தில் குழுமிய அவர்கள், அங்கிருந்து ஊர்வலமாக கிளம்பி, ஆர்ச்சைத் தாண்டி தமிழகஎல்லைக்குள் நுழைந்தனர்.
அவர்களை தடுத்து நிறுத்துவது போல கர்நாடக போலீஸார் பாவ்லா காட்டினர். தொடர்ந்து உள்ளே வந்த கன்னட அமைப்பினர் தமிழகத்திற்குஎதிராக கோஷமிட்டனர். ஒரு சொட்டு தண்ணீர் கூட தர மாட்டோம் என வெறித்தனமாக கோஷமிட்டு போராட்டம் நடத்தினர்.
தமிழகத்திற்குள் நுழைந்து கன்னடர்கள் போராட்டும் நடத்தும் தகவல் அறிந்து கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. தேன்மொழி அங்கு போலீஸ்படையுடன் விரைந்து வந்தார்.
இதற்கு மேல் வரக் கூடாது என்று போலீஸார் கடுமையாக எச்சரித்தனர். அவர்களுடன் கன்னட வெறியர்கள் வாக்குவாதம் நடத்தினர், சாலைமறியலிலும் ஈடுபட்டனர்.
உடனடியாக திரும்பிச் செல்ல வேண்டும், இல்லாவிட்டால், தடியடி நடத்தப்படும் என போலீஸார் எச்சரித்ததால் கன்னட அமைப்பினர் சிறிதுநேரத்தில் அங்கிருந்து கர்நாடகத்திற்குக் கிளம்பிச் சென்றனர்.
கன்னட வெறியர்கள் அத்துமீறி தமிழக பகுதிக்குள் நுழைந்து போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து அங்கு அதிக அளவில் போலீஸார்குவிக்கப்பட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications