கேரளம் பயன்படுத்தாத காவிரி நீரும் தமிழகத்துக்கே-நடுவர் மன்றம்
டெல்லி:காவிரியில் இருந்து கிடைக்கும் 30 டிஎம்சி நீரில் தான் பயன்படுத்தாத நீரை தமிழக்ததுக்குத் தர வேண்டும் என கேரளத்துக்கு நடுவர் மன்றம்உத்தரவிட்டுள்ளது.
நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் தமிழகத்துக்கு 419 டிஎம்சி, கர்நாடகத்துக்கு 270 டிஎம்சி, கேரளத்துக்கு 30 டிஎம்சி, புதுச்சேரிக்கு 7 டிஎம்சிஒதுக்கப்பட்டது.
ஆனால், இதில் கேரளத்துக்கு 30 டிஎம்சி ஒதுக்கப்பட்டது ஆச்சரியக்குறிகளை ஏற்படுத்தியது. காரணம், கேரளத்தில் அவ்வளவு விளை நிலமேஇல்லை. இருக்கும் நிலத்திலும் ரப்பர், ஏலக்காய் என பணப் பயிர்களையே பெரும்பாலும் விளைவிக்கிறார்கள்.
நெல்லை பயிரிட்டால் அறுவடை வரை ரொம்பவே சிரமங்கள் உண்டு. அந்த கஷ்டத்தை எல்லாம் அவர்கள் விரும்புவதில்லை.
காவிரி நீரில் கேரளம் அதிகபட்சமாக பயன்படுத்துவது 6 டிஎம்சி நீரைத் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் கேரளத்துக்கு ஒதுக்கப்படும் 30 டிஎம்சி நீரில் பெரும்பாலான நீர் அரபிக் கடலுக்கே போகப் போகிறது என அதிமுக பொதுச் செயலாளர்ஜெயலலிதா உள்ளிட்டோர் குற்றம் சாட்டியிருந்தனர்.
ஆனால், இந்த மிச்ச நீர் அரபிக் கடலுக்குப் போவதில்லை, மாறாக கபினி, பவானி, அமராவதி அணைகளுக்கே செல்கிறது என கேரள, தமிழக பாசனநிபுணர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
இந் நிலையில் சுமார் 1,000 பக்கம் கொண்ட நடுவர் மன்றத்தின் தீர்ப்பின் நுண்ணிய விவரங்கள் இப்போது தான் படிப்படியாக வெளியாகஆரம்பித்துள்ளன.
இதில் 30 டிஎம்சியையும் கேரளம் பயன்படுத்தும் வரை மிச்சமிருக்கும் நீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ள விவரம்இப்போது வெளியாகியுள்ளது.
கேரளம் பயன்படுத்தாத நீர் கர்நாடகத்தின் கபினி அணைக்குப் போன பின் அதை கர்நாடகம் தான் தமிழகத்துக்குத் திறந்துவிட வேண்டும். இந்தநீரைத் தருவதால் கர்நாடகம் ஏற்கனவே தமிழகத்துக்கு தர வேண்டிய 192 டிஎம்சி நீரில் எந்த மாற்றமும் இல்லை.
கேரளம் பயன்படுத்தாத நீர் கபினி அணைக்கு வரும் முன் அதை அளவிட கேரள-கர்நாடக எல்லையில் அளவிடும் மையத்தை அமைக்கவும் நடுவர்மன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications