தமிழகத்துக்கு எதிரான போக்கு-திருமா கவலை
சென்னை:காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை மத்திய அரசு உடனடியாக அரசிதழில் வெளியிடக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் இன்று சென்னையில்ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்சியின் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில், துணைப் பொதுச் செயலாளரும்எம்.எல்.ஏவுமான ரவிக்குமார், செய்தித் தொடர்பாளர் வன்னி அரசு ஆகியோர் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
நடுவர் மன்றத் தீர்ப்பை உடனடியாக அரசிதழில் (கெஜட்) வெளியிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகத்தில் வழும்தமிழர்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று திருமாவளன் அப்போது கோரிக்கை விடுத்தார்.
முன்னதாக அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு தமிழக விவசாயிகள் எதிர்பார்த்தளவு இல்லை. இத்தீர்ப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எல்லா வகையிலும் தீர்ப்பைஎதிர்த்து தமிழக அரசு நடுவர் மன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும்.
மத்திய நீர் வளத்துறை அமைச்சர் சைபுதீன் சோஸ் ஆற்று நீர் உரிமை குறித்த அதிகாரங்களை பொதுப் பட்டியலில் இருந்து நீக்கி மத்திய அரசுபட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தியிருப்பது மாநில அரசுகளின் உரிமையை பறிப்பதாகும்.
முல்லைப் பெரியாறு, காவிரி, பாலாறு, பவானி போன்ற ஆற்று நீர் உரிமைகளில் தமிழகத்திற்கு எதிரான போக்கு நிலவுகிறது. மத்திய அரசு இதில்தீவிர கவனம் செலுத்தி தமிழக விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications