ஐ.நா. பதவியிலிருந்து சசி தரூர் விலகல்
நியூயார்க்:ஐ.நா. துணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து இந்தியாவின் சசி தரூர் விலகி விட்டார். புதிய துணைப்பொதுச் செயலாளராக ஜப்பானைச் சேர்ந்த கியோடகா அகசாகா நியமிக்கப்பட்டுள்ளார்.
தென் கொரியாவைச் சேர்ந்த பான் கி மூன் ஐ.நா. புதிய பொதுச் செயலாளராக ஜனவரி 1ம் தேதிபொறுப்பேற்றார். அதன் பின்னர் பல்வேறு பதவிகளுக்கும் புதியவர்களை அவர் நியமித்து வருகிறார்.
துணைப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பொறுப்புகளுக்கு புதியவர்களை அவர்நியமித்துள்ளார்.
துணைப் பொதுச் செயலாளராக (பொதுத் தகவல் மற்றும் தொடர்பு) இதுவரை இருந்து வந்த இந்தியாவின் சசிதரூர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார். அவரது பதவிக்காலம் இந்த மாத இறுதி வரை இருக்கிறது.இருப்பினும் அதற்கு முன்பாகவே அவர் விலகி விட்டார்.
அவரது இடத்தில் ஜப்பானைச் சேர்ந்த கியோடகா அகசாகா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இதுவரை ஐ.நா.வின்பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக் கழக துணைப் பொதுச் செயலாளராக இருந்து வந்தார்.சர்வதேச அளவில் பல்வேறு பதவிகளை கியோடகா வகித்துள்ளார். 2000மாவது ஆண்டு .தல் 2001 வரைஜப்பானுக்கான ஐ.நா. தூதராகவும் அவர் பதவி வகித்துள்ளார்.
வர்த்தகம் மற்றும் கட்டணத்துக்கான பொது ஒப்பந்தம் (காட்) அமைப்பின் செயலாளராகவும் அவர்பணியாற்றியுள்ளார். உலக வர்த்தக அமைப்பு, உலக சுகாதார நிறுவனம் ஆகியவற்றிலும் பணியாற்றியுள்ளார்.
இத் தகவலை பான் கி மூனின் செயலாளர் விஜய் நம்பியார் (இவரும் சசி தரூரைப் போலவே கேரளாவைச்சேர்ந்தவரே) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கியோடகா தவிர மேலும் பலரையும் பான் கி மூன் நியமித்துள்ளார். இந்தோனேசியாவுக்கான அமெரிக்க தூதர்லின் பாஸ்கோ அரசியல் விவகாரப் பிரிவு இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சசி தரூர் ராஜினாமா ஏன்?:
இதற்கிடையே, தனது பதவி விலகல் குறித்து சசி தரூர் கூறுகையில், பான் கி மூனுக்கு, தனது ஊழியர்களை தனதுவிருப்பத்திற்கே அமைத்துக் கொள்வதில், நியமனம் செய்வதில் முழு உரிமை உண்டு.
நியமனங்களில் அவர் சுதந்திரமாக செயல்பட வழி விடும் வகையிலேயே நான் ராஜினாமா செய்தேன்.
எனது புதிய தொழில்முறை வாழ்க்கை குறித்த சவால்களை சந்திக்கத் தயாராகி வருறேன் என்றார்.
இதற்கிடையே, தற்போது உள்ள அனைத்து இணைச் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள், உதவிச்செயலாளர்களையும் ராஜினாமா செய்யும்படி பான் கோரியுள்ளார். அதன் பின்னர் புதிய செயலாளர்கள்நியமிக்கப்படுவர்.
ஐ.நா. பொதுச் செயலாளர் போட்டியில் பான் கி மூனை எதிர்த்து சசி தரூர் போட்டியிட்டது நினைவிருக்கலாம்.அமெரிக்கா மற்றும் சீனாவின் ஆதரவு கிடைக்காததால் போட்டியிலிருந்து சசி தரூர் விலகினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications