ஈராக்: மனித வெடிகுண்டுக்கு 12 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
பாக்தாத்:வடக்கு ஈராக்கில் சதாம் உசேனின் சொந்த ஊரில் காவல் நிலையத்தில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர்.
வடக்கு ஈராக்கில் தலைநகர் பாக்தாத்திலிருந்து 175 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திக்ரித், சதாம் உசேனின் சொந்த ஊராகும். இங்குள்ள டோர்என்ற இடத்தில் ஒரு காவல் நிலையம் மீது இன்று காலை மனித வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.
வெடிபொருட்களை நிரப்பிய லாரியுடன், மனித வெடிகுண்டாக வந்தவர் மோதி குண்டுகளை வெடிக்கச் செய்தார். இதில் 12 போலீஸார் பலியாகினர்.
இந்தத் தாக்குதலில் காவல் நிலையம் முற்றிலும் சேதமடைந்தது. சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. பொதுமக்கள் சிலரும்பலியாகியுள்ளதாக ஒரு தகவல் கூறுகிறது.












Click it and Unblock the Notifications