தமிழகத்திற்குள் மீண்டும் ஊடுறுவிய கன்னடர்கள்:விஜய் படம் நிறுத்தம்-பஸ்கள் ஓடுகின்றன
ஓசூர்:தமிழக எல்லைக்குள் தீப்பந்தங்களுடன் ஊடுறுவிய கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பெங்களூரில் விஜய்நடித்த படம் திரையிடுவதையும் கன்னட வெறியர்கள் தடுத்து நிறுத்தினர். 5 நாட்களுக்குப் பின் கர்நாடகத்திற்குச் செல்லும் பஸ், லாரி போக்குவரத்துநேற்று மாலை முதல் சீரானது.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பையடுத்து கர்நாடக மாநிலத்தில் நடந்து வந்த போராட்டங்களால் கடந்த ஐந்து நாட்களாக தமிழகத்திலிருந்துகர்நாடகததிற்குள் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள், லாரிகள் செல்ல முடியாமல் கர்நாடகத்துடனான தமிழக எல்லைப் பகுதியோடுநிறுத்தப்பட்டன.
இதனால் சரக்குப் போக்குவரத்தும், பயணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஓசூர் நகரோடு பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பெங்களூருக்குசெல்ல வேண்டியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
குறிப்பாக தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்கள்தான் கர்நாடகத்திற்குள் நுழைய முடியாமல் கடும் அவதிப்பட்டன. இரவில் மட்டும் லாரிகளைபாதுகாப்புடன் கர்நாடகத்திற்குள் சில நாட்கள் அனுப்பி வைத்தனர். அவையும் கூட கர்நாடக பதிவெண் கொண்ட வாகனங்கள்தான்.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து கர்நாடக அரசுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள்செல்ல அனுமதி பெறப்பட்டது. இதையடுத்து நேற்று பிற்பகல் முதல் தமிழக பதிவு எண்கள் கொண்ட சரக்கு லாரிகள் கர்நாடகத்திற்குள் செல்லத்தொடங்கின.
கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. தேன்மொழியின் நேரடி பார்வையில் பத்து பத்து லாரிகளாக சேர்த்து கர்நாடகத்திற்குள் அனுப்பி வைத்தனர். மேலும்கர்நாடக காவல்துறை அதிகாரிகளுடனும் அவர் அடிக்கடி தொடர்பு கொண்டு சுமூகமான போக்குவரத்தை உறுதி செய்து கொண்டார்.
தமிழக லாரிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என கர்நாடக காவல்துறை உறுதியளித்ததைத் தொடர்ந்து அதிக அளவிலான லாரிகள்அனுப்பப்பட்டன.
லாரிப் போக்குவரத்து ?கமடைந்ததைத் தொடர்ந்து நேற்று மாலை முதல் ஓசூரிலிருந்து பேருந்துப் போக்குவரத்தும் தொடங்கியது. ஓசூர், பெங்களூர்இடையே தமிழக அரசுப் பேருந்துகள் வழக்கம் போல செல்லத் தொடங்கின.
வாகனப் போக்குவரத்து சுமூகமான போதிலும், நாளை கர்நாடக பந்த் நடைபெறவிருப்பதால், இன்று மாலையுடன் மீண்டும் பேருந்துகள், லாரிகள்நிறுத்தப்படும் எனத் தெரிகிறது.
தீப்பந்தத்துடன் ஊர்வலம்:
இந்த நிலையில் போக்குவரத்து சுமூகமடைந்த சில மணி நேரங்களிலேயே இரவு 9 மணிவாக்கில் கர்நாடக ஜாக்ரிதி வேதிகே அமைப்பைச் சேர்ந்த500க்கும் மேற்பட்டோர், தமிழக எல்லைக்குள் அத்துமீறி தீப்பந்தங்களுடன் நுழைந்தனர்.
பின்னர் நடு ரோட்டில் மறியல் செய்த அவர்கள் டயர்களைப் போட்டு கொளுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழக போலீஸார் அதிக அளவில் அங்கு குவிக்கப்பட்டனர்.
இந்த திடீர் போராட்டத்த்ைத தொடர்ந்து வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 3 மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர்போராட்டக்காரர்கள் திரும்பிச் சென்றனர்.
ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு தமிழக எல்லைக்குள் நுழைந்து கன்னட வெறியர்கள் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் மீண்டும்தீப்பந்தங்களுடன் வந்து டயர்களைப் போட்டு கொளுத்தி போராட்டம் நடத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விஜய் படம் நிறுத்தம்:
பெங்களூரில் கன்னட அமைப்பினரின் போராட்டத்தால் தமிழ்ப் படம் திரையிடுவது நிறுத்தப்பட்டது.
பெங்களூர் வண்ணார்பேட்டை விவேக்நகர் பாலாஜி தியேட்டரில் விஜய்யின் போக்கிரி மற்றும் விஷாலின் தாமிரபரணி ஆகிய படங்கள்திரையிடப்பட்டுள்ளன.
நேற்று அந்தப் படங்கள் ஓடிக் கொண்டிருந்தபோது அங்கு கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பைச் சர்ந்தவர்கள் கட்டைகளுடன் திரண்டு வந்தனர்.
தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த போஸ்டர்கள், கட் அவுட்களை அடித்து நொறுக்கி கிழித்தெறிந்த அவர்கள் தமிழ்ப் படங்களை நிறுத்துமாறுமிரட்டினர். இதையடுத்து தமிழ்ப் படங்கள் நிறுத்தப்பட்டு ராஜ்குமார் நடித்த அறுதப் பழசான கன்னடப் படங்கள் திரையிடப்பட்டன.
காவிரி எக்ஸ்பிரஸ் மறிப்பு-தண்டவாளத்தில் பொங்கல்:
இதற்கிடையே, பெங்களூர், மைசூர் இடையே தஞ்சை வழியாக செல்லும் காவிரி எக்ஸ்பிரஸ் ரயிலை கர்நாடக விவசாய சங்கத்தினர் கஞ்ஞலகரேஎனற இடத்தில் மறித்து நிறுத்திப் போராட்டம் நடத்தினர்.
மேலும் தண்டவாளத்தில் அமர்ந்து பொங்கல் வைத்தும் போராட்டம் நடத்தினர். இதனால் அந்தப் பாதையில் ரயில் போக்குவரத்த பாதிக்கப்பட்டது.இதேபோல ஷிமோக-மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலையும் போராட்டக்காரர்கள் நிறுத்தினர்.
சாம்ராஜ்நகர், குடகு, மாண்டியா, மைசூர் ஆகிய பகுதிகளிலும் தொடர்ந்து போராட்டங்கள் நடந்தவண்ணம் உள்ளன.
பெங்களூரில், கன்னட சாளுவளி வாட்டாள் பக்ஷா என்ற கன்னட வெறி கட்சியின் தலைவரான வாட்டாள் நாகராஜ் தலைமையில் தலைமைத் தபால்நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்பட்டது.
இதையடுத்து நாகராஜ் உள்ளிட்ட 20 பேரை போலீஸார் கைது செய்தனர். இவர்கள், கர்நாடகத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதமிழரான தொழிலதிபர் எம்.ஏ.எம்.ராமசாமி, தெலுங்கரான வெங்கையா நாயுடு, மலையாளியான ராஜீவ் சந்திரசேகர் ஆகியோரை எதிர்த்தும்கோஷமிட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications