சர்வ கட்சிக் கூட்டத்துக்குத் தயார்: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட தமிழக அரசு தயாராகவே உள்ளது என்று முதல்வர் கருணாநிதிகூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தைச் சுற்றி ஒருபுறம் கர்நாடகம், மறுபுறம் ஆந்திரம், இன்னொரு புறம் கேரளம் என நீர்வளம் மிக்க மூன்று மாநிலங்களுக்கிடையே, ஒருதீபகற்பம் போல நமது மாநிலம் இருக்கிறது.

குறிப்பிட்ட மூன்று மாநிலங்களுக்கும் பயன்படாமல், நீர்வளம் குறைந்த தமிழகத்திற்கும் பயன்படாமல், ஏராளமான தண்ணீர் வீணாகிறது அல்லதுகடலில் விழுகிறது என்பதையும் 9.12.2006 அன்று டெல்லியில் நடந்த தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் விவரித்துச் சொல்லி, நதிகளைஇணைக்கும் திட்டத்திற்கு தொடக்கம் கொடுத்திட வேண்டும் என்பதையும் வலியுறுத்திச் சொன்னேன்.

இப்பொழுது நிலைமை என்ன? 38 ஆண்டுகளாக காவிரி நீருக்காக கர்நாடக மாநிலத்துடன் தகராறு, அதேபோல பாலாறு பிரச்சினை, முல்லைப்பெரியாறு பிரச்சினை-இந்தப் பிரச்சினைகளை அரசியலாக்குவதுவதால் ஏற்படுகிற அல்லல், அவதி!

1979ம் ஆண்டு இந்தியப் பிரதமர் சரண்சிங் எழுதிய கடிதத்தை ஏற்று தமிழக முதல் அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். முல்லைப் பெரியாறுஅணையில் 136 அடி மட்டும் தேக்குவதற்கு ஒத்துக் கொண்டதை தற்காலிகமாக என்று குறிப்பிடாத காரணத்தால், எப்போதுமே 136 அடி என்றுகற்பனை செய்து கொண்டு கேரள மாநில அரசு வம்பு செய்து கொண்டிருக்கிறது.

பாலாறு பிரச்சினை குறித்து ஆந்திர முதல் அமைச்சரின் அணுகுமுறை நம்பிக்கை ஊட்டுவதாக இருக்கிறது.

ஒரு மாநிலத்தில் உருவாகும் பிரச்சினைகளால், அல்லது ஒரு மாநிலம் உருவாக்கும் பிரச்சினைகளால் எந்த மாநிலத்து மக்களும் பாதிக்கப்படக் கூடாதுஎன்பதில் இரு வேறு கருத்துக்கு இடம் இல்லை.

குறிப்பாக தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய நான்கு மாநிலங்களின் மக்கள்; ஒரே மாநிலத்தில் வாழ்ந்திடாமல்; பல்வேறுகாரணங்களின் அடிப்படையில், இந்த நான்கு மாநிலங்களிலுமே பரவலாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அப்படி அவர்கள் வாழ்வது சகோதர பாசத்துடன்-தூய்மையான உறவு மனப்பான்மையோடு அமைந்திருப்பதையும், அங்கிங்கெணாதபடிஎங்கங்ெகும் காண முடிகிறது.

ஆனால் கற்பூரக் கூடையில், தீப்பொறி பட்டது போல சில திடுக்கிடும் நிகழ்ச்சிகள் உருவாகாமலும் இல்லை.

எந்தவொரு பிரச்சினையானாலும், குறிப்பாக காவிரி, முல்பைப் பெரியாறு, பாலாறு போன்ற பிரச்சினைகளில் நமது மாநில உரிமைகளைநிலைநாட்ட நாம் குரல் கொடுக்கும்போது, அது ஏதோ அண்டை மாநில உரிமைகளில் நாம் கை வைப்பது போன்ற கட்டுக் கதைகளைப் புணைந்துகசப்பு உணர்வைப் பெருக்கிடத் தூண்டுதல் முயற்சிகளைச் சிலர் மேற்கொள்கிறார்கள்.

1991ம் ஆண்டு காவேரி நடுவர் மன்றம் அளித்த இடைக்காலத் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு 205 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும் என்றுகூரப்பட்டிருந்தது. அதில் 6 டிஎம்சி தண்ணீரை புதுச்சேரிக்கு கொடுக்க வேண்டும். அதுபோக 199 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு.இப்போது காவிரி நடுவர் மன்றம் அளித்துள்ள தீர்ப்பின்படி 217 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்குக் கிடைத்திருக்கிறது. அதில் 7 டிஎம்சிபுதுச்சேரிக்குப் போக மீதம் 210 டிஎம்சி தண்ணீர் நமக்குக் கிடைக்கும்.

அதன் சாதக பாதகங்களை பின்வருமாறு தொகுத்துப் பார்க்கும்போது தமிழ்நாடு எடுத்து வைத்த வாதத்தின் பேரில், நடுவர் மன்ற ஆணையில்ஒத்துக் கொள்ளப்பட்டவை பின்வருமாறு:

? காவிரிப் படுகையில், மொத்த நீரின் அளவு காவிரி உண்மை அறியும் குழுவின் அறிக்கையில், கூறியுள்ளபடியே பொதுவாக ஒத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

? கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நீர் 192 டிஎம்சி என குறிக்கப்பட்டு அதை பில்லிகுண்டுவிலோ, அல்லதுகர்நாடக தமிழக எல்லையில் வேறு ஏதாவது அளக்க வசதியான ஒரு இடத்திலோ கொண்டுக்க வேண்டும் என்பது ஆணை.

? அதில் மாதா மாதம் எவ்வளவு தண்ணீர் விட வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது ஒரு முக்கிய அம்சம்.

? கீழணையில் வட கிழக்குப் பருவ மழைக்காலத்தில் பெருகும் வெள்ளம் உபயோகிக்க முடியாமல், கடலுக்குச் செல்கிறது என தமிழ்நாடுவாதிட்டதில், அதை 4 டிஎம்சி என கணக்கிடலாம் என ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

? நிலத்தடி நீரின் உபயோகம் காவிரி நீரின் உபயோகமாக கருதப்படாது. டெல்டாவில் உள்ள நிலத்தடி நீர் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவேண்டும் என கர்நாடகம் விடாமல் வாதிட்டும் அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

? கர்நாடகத்தின் நீரேற்றுப் பாசனத் திட்டங்கள் ஒத்துக் கொள்ளப்படவில்லை.

? கர்நாடகத்தின் புதிய பாசனத் திட்டங்களில் ஒரு போக புஞ்சைப் பயிர்தான் அனுமதிக்கப்பட்டுள்ளது.

? காவிரியின் மேல் பகுதியில் உள்ள மாநிலங்கள் கீழ் பகுதியில் உள்ள ரைபேரியன் மாநிலங்களுக்கு குறிப்பிட்டபடி கொடுக்க வேண்டியதண்ணீரைப் பாதிக்கும் வகையில், எந்தவொரு நடவடிக்கையும் இனிமேல் எடுக்கக் கூடாது.

? கர்நாடகத்திற்கு கரும்புப் பயிரின் பரப்பளவு 1924ன் ஒப்பந்தத்திற்கு மிகாமல், கிருஷ்ணராஜ சாகர் அணையின் பாசனப் பகுதியில் மட்டும்அனுமதிக்கப்பட்டுள்ளது.

? சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக 10 டிஎம்சி தண்ணீர் சேர்க்கப்பட்டுள்ளது.

? கேரள மாநிலம் அதற்கு ஒதுக்கப்பட்ட 30 டிஎம்சி நீரை முழுமையாக பயன்படுத்தும் வரை, பயன்படுத்தாத நீரை தமிழகம் பயன்படுத்தஅனுமதிக்கப்பட்டுள்ளது. அதில் கர்நாடகத்திற்கு எந்தப் பகுதியும் ஒதுக்கப்படவில்லை.

? நான்கு மாநிலங்களிலும் பாசனக் காலம் ஜனவரி 31ம் தேதி முடிய வேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது.

இவை ஏற்கப்படாத நிலையில், ஏற்கப்படாதவை என பட்டியலிடப்படும்போது அவை பின்வருமாறு அமைகின்றன:

? 1924ம் ஆண்டு ஒப்பந்தம் 1974க்குப் பிறகும் நீடிக்கப்பட வேண்டும் என்பதற்குப் பதிலாக நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையே அந்தஒப்பந்தத்திற்குப் பதில் செயல்படும்.

? 50 சதவீத அடிப்படையில், காவிரிப் படுகையில் உள்ள மொத்த அளவின் நீர் கணக்கிடப்படுகிறது. தமிழ்நாடு 75 சதவீத அடிப்படையில்கணக்கிடப்பட வேண்டும்.

? மொத்தத்தில் தமிழ்நாடு 29.3 லட்சம் ஏக்கர் பாசனப் பர்பிற்கு 566 டிஎம்சி நீர் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தும் 24.71 லட்சம்ஏக்கர் மட்டும் அனுமதிக்கப்பட்டு 419 டிஎம்சி நீர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

? இரண்டாம் போக நெல் பயிர்மற்ற பாசனங்களில் முழுமையாக அனுமதிக்கப்படவில்லை. இரண்டாம் போக நெல் பயிருக்குப் பதிலாக சிலபாசனத் திட்டங்களில் புஞ்சை பாசனம் அனுமதிக்கப்பட்டுள்ளது.

? அமராவதி நீர்த் தேக்கப் பாசனப் பகுதியில், அந்த்த திட்டத்தில் 3 ஆயிரம் ஏக்கர் கரும்புப் பாசனம் இருந்தாலும் அதுஅனுமதிக்கப்படவில்லை. அதற்குப் பதில் நெல் பயிராக கணக்கிடப்பட்டுள்ளது.

மேற்காணும் இவை நமது மாநிலத்திற்குப் பாதகமான அம்சங்களாகும். இவற்றைப் பட்டியலிட்டு மறு ஆய்வு நடத்துமாறும், குறைபாடுகளைப்போக்கி தமிழகதிதன் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறும் நடுவர் மன்றத்திடம் மேல் முறையீடு செய்து கொள்ளக் கூடிய வழி அடைபட்டுவிடவில்லை என்றே நம்புவதால், அதற்குரிய காலக்கெடுவுக்குள் உரிய முறையில் நமக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகளுக்காக உறுதியாகவாதாட இருக்கிறோம்.

இதுதொடர்பாக நீர்ப்பாசனத் துறை வல்லுனர்கள், வழக்கறிஞர்கள், விவசாயச் சங்கப் பிரதிநிதிகள், அனைத்துக் கட்சித் தலைவர்களிடம் விவாதித்துநடுவர் மன்ற இறுதித் தீர்ப்பால் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை நீக்க மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்வதற்கும், சட்டஙுதியான நல்ல தீர்வுகாண்பதற்கும், தமிழக அரசு .ன்வரும் என்றும், அதில் எந்தத் தயக்கமும் இல்லை என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+