மத்திய அரசை கேட்க வேண்டும் ஜெ.: கருணாநிதி
சென்னை:டிஐஜி ஷகீல் அகமது அக்தர் மாற்றப்பட்டது குறித்து மத்திய அரசிடம்தான் ஜெயலலிதா கேட்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்துள்ள பதில்கள்:
கேள்வி: எனது அறிக்கைக்கு மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் அல்லது இணை அமைச்சர் ரகுபதியோதான் பதில் சொல்லியிருக்கவேண்டும் என ஜெயலலிதா சொல்லியுள்ளாரே?
கருணாநிதி: அப்படியானால் தனது கேள்வியை ஜெயலலிதா, மத்திய அரசை நோக்கியல்லவா எழுப்பியிருக்க வேண்டும்? எதற்காக வரிக்கு வரிஎன்னுடைய பெயரை இணைத்து கேள்வி எழுப்ப வேண்டும்?
அந்த அதிகாரியை மத்திய அரசுப் பணிக்கு யார் அனுப்பியது என்று என்னை கேட்டதால்தான் நான் அவரை அனுப்பவில்லை, ஜெயலலிதா தான்அனுப்பினார் என்று கூறி, அதற்காக அவர் கோப்பில் கையெழுத்திட்ட ஆதாரங்களையும் செய்தியாளர்களிடம் நேரடியாகக் காட்டினேன்.
ஜெயலலிதாவை முழுமையாக அறிந்த நான் சொல்கிற பதிலை விட, அமெரிக்க ஜனாதிபதியே பதில் சொன்னாலும்; அவருக்கு இனிக்காதே!
கேள்வி: அந்த அதிகாரியை இரவோடு இரவாக பத்திரமாக, மாநிலப் பணிக்கு திரும்ப அழைத்தது மிகப் பெரிய தவறு என்கிறாரே ஜெயலலிதா.?
கருணாநிதி: இரவோடு இரவாக அவரை அழைத்து வரவில்லை. அப்படி, யார், யாரை, யாருக்குத் தெரியாமல் அழைத்தார்கள் என்பது பழைய கதை.மாறுதல் கோரி அந்த அதிகாரி 45 நாட்களுக்கு முன்பே விண்ணப்பம் செய்திருந்தார். கடந்த 6ம் தேதிதான் மாநிலப் பணியில் சேர்ந்தார் என்றுஏற்கனவே செய்தி வந்துள்ளது. எனவே இதுவும் ஜெயலலிதா வழக்கமாக கூறும் புளுகுணிக் கதைதான்.
கேள்வி: அந்த அதிகாரியின் இன்றைய நடவடிக்கை குறித்து ஏதும் சொல்வதற்கு கருணாநிதிக்கு ஏன் வாய் வரவில்லை என்கிறாரே ஜெயலலிதா?
கருணாநிதி: அந்த அதிகாரியின் இன்றைய நடவடிக்கை என்றால் என்ன நடவடிக்கை? அவர் தவறு செய்ததாக மத்திய அரசோ, அதன்அமைப்புகளோ எதுவும் தமிழக அரசுக்கு தெரிவிக்கவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்த பிறகு அந்த அதிகாரியின் நடவடிக்கையில்ஏதாவது தவறிருந்தால் அதற்கான ஆதாரங்களோடு ஜெயலலிதா ஏன் தனது அறிக்கையில் தெரிவிக்கவில்லை?
ஜெயலலிதாவின் குற்றச்சாட்டு உண்மை என உறுதிப்படுத்தப்படு மேயானால் அல்லது மத்திய அரசோ அதன் புலனாய்வு அமைப்புகளோ அதைப்பற்றி மாநில அரசுக்குத் தெரிவிப்பார்களேயானால் உடனே உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கேள்வி:
நான் அனுப்பும் ஒரு நபரிடம் பதில் சொல்லத் தயாரா என்று கேட்டுள்ளாரே ஜெயலலிதா?
கருணாநிதி: யார் அவர்? எம்.ஜி.ஆர். தோட்டத்து காவலர் முத்துவைப் போன்ற ஒருவராக இருந்தால் வசதியாக இருக்கும். அதாவது மேலும் சிலவிவரங்களை அறிந்து-; வினாக்கள், விடைகள் அமையும் அல்லவா?
கேள்வி: விஜயகாந்தின் தேமுதிக வளருகிறதா? தேய்ந்து வருகிறதா?
கருணாநிதி: இதோ ஓர் ஒப்பீடு. 2006-ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் தேர்தலில் கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில், வார்டு38-ல் அதிமுக பெற்ற வாக்குகள் 14 ஆயிரத்து 555, தேமுதிக பெற்ற வாக்குகள் 12 ஆயிரத்து 324, காங்கிரஸ் வாக்குகள் 10 ஆயிரத்து477.
இப்போது இதே இடத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வாக்குகள் 22,251, தேமுதிக 5,601 என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications