ராஜபக்ஷே அரசுக்கு புதிய ஆபத்து!
கொழும்பு:இலங்கை அதிபர் ராஜபக்ஷே அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வர அமைச்சர்பதவியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அதிபர் சந்திரிகாவின் தம்பி தலைமையில் சில கட்சிகள் முடிவுசெய்துள்ளதால் ராஜ பக்ஷே அரசுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் விடுதலைப் புலிகளை ஒடுக்குகிறோம் என்ற பெயரில், தமிழர்கள் மீது ராணுவம் கடும் தாக்குதல்நடத்தி வருகிறது. வாகரை உள்ளிட்ட சில இடங்களில் வசித்து வந்த தமிழர்களை விரட்டி அடித்து விட்டு அந்தப்பகுதிகளை கைப்பற்றியுள்ளது.
ராணுவத்தின் தொடர் தாக்குதல் காரணமாக பல்லாயிரணக்கான தமிழர்கள் இடம் பெயர்ந்துள்ளனர். இந்தநிலையில் தனது அரசுக்கு பெரும்பான்மை பலத்தை சேர்க்கும் முயற்சியில் அதிபர் ராஜபக்ஷே இறங்கியுள்ளார்.
முதல் கட்டமாக முக்கிய எதிர்க்கட்சியான ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சியை உடைத்து 18எம்பிக்களை இழுத்து அவர்களை அமைச்சராக்கினார். இதற்கு ஆட்சேபம் தெரிவித்த சிங்களக் கட்சிக்கு 2அமைச்சர் பதவிகளைக் கொடுத்தார்.
இதற்கு ராஜபக்ஷேவின் கட்சிக்குள் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. குறிப்பாக முன்னாள் அதிபர் சந்தி>காவின் தம்பிஅனுரா பண்டாரநாயகே தலைமையில் 3 அமைச்சர்கள் கொந்தளித்தனர். இதையடுத்து அவர்களை அதிரடியாகஅமைச்சர் பதவியிலிருந்து நீக்கினார்.
போர்க்கொடி உயர்த்தியவர்களில் அனுரா தவிர முன்னாள் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீராவும்முக்கியமான நபர் ஆவார். இந் நிலையில் ராஜபக்ஷேவுக்கு எதிராக கட்சிகளை திரட்டும் வேலையில் அனுராஇறங்கியுள்ளார்.
மற்றொரு முக்கிய சிங்கள கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனாவும் இப்போது ராஜபக்ஷேவுக்கு எதிராகபோர்க்கொடி உயர்த்தியுள்ளது. ராஜபக்ஷே அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம்கொண்டு வர இந்தக் கட்சி முடிவு செய்துள்ளது.
இதேபோல மேலும் சில சிங்கள கட்சிகள் மற்றும் தமிழ்க் கட்சிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரத்திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற 113 ஓட்டுக்கள் தேவை. தற்போது அரசுக்கு எதிராக 102 பேர்உள்ளதாக தெரிகிறது. எனவே மேலும் 11 பேரை சேர்த்துக் கொண்ட பின்னர் நம்பிக்கை இல்லாத்தீர்மானத்தைக் கொண்டு வர அனுரா மற்றும் பிற அதிருப்தி கட்சிகள் முடிவு செய்துள்ளன.
அனுரா மற்றும் பிற அதிருப்திக் கட்சிகளின் தீவிர நடவடிக்கையால் விரைவில் ராஜபக்ஷே அரசு கவிழக் கூடியஆபத்து அதிகரித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications