கருணாநிதிக்கு டிவி பிஸினஸே முக்கியம்-அதிமுக
சென்னை:காவிரிப் பிரச்சினையிலும், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்திலும், முதல்வர் கருணாநிதி தனது குடும்பத் தொலைக்காட்சியின் பிசினஸைமனதில் கொண்டு தமிழக மக்களுக்கு பெரும் துரோகம் இழைத்து விட்டார், தமிழக உரிமைகளை விட்டுக் கொடுத்து விட்டார் என முன்னாள்அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு விளக்க பொதுக் கூட்டம் சென்னை கொருக்குப்பேட்டையில் நடந்தது. இதில் பன்னீர் செல்வம் சிறப்புரையாற்றினார்.
அவர் பேசுகையில், முல்லைப் பெரியாறு, காவிரி பிரச்சினைகளில் தமிழக உரிமைகளை கருணாநிதி விட்டுக் கொடுத்து விட்டார். இதற்கு முக்கியக்காரணம் கேரளாவிலும், கர்நாடகத்திலும் அவரது குடும்பத் தொலைக்காட்சிகள் இருப்பதுதான்.
எங்கே தான் நடவடிக்கை எடுக்கப் போய், குடும்பத் தொலைக்காட்சிகளுக்கு பிரச்சினை வந்து விடுமோ என்று அஞ்சித்தான் தமிழக நலனைவிட்டுக் கொடுத்து விட்டார், துரோகம் இழைத்து விட்டார்.
விரைவில் காலம் மாறும், காட்சி மாறும், ஜெயலலிதாவின் ஆட்சி தமிழகத்தில் மீண்டும் மலரும்.
2001ம் ஆண்டு கருணாநிதி செய்த நிதிக்குளறுபடியால் நிதிச் சரிவு ஏற்பட்டு அரசு ஊழியர்களுக்கு மாதச் சம்பளம் கூடத் தர முடியாமல், ரிசர்வ்வங்கியில் கடன் பெற்று தர வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஆனால் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு நிலைமை சீரடைந்தது. ரூ. 15 ஆயிரம் கோடி அளவுக்கு இருப்பு வைக்கப்பட்டது. ஆனால் இப்போதுமறுபடியும் கருணாநிதி அரசின் போலி இலவசத் திட்டங்களால் கையிருப்பு கரைந்து திவாலாகும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார் பன்னீர் செல்வம்.
கூட்டத்தில் மறைந்த காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications