பஞ்சாபில் நாளை சட்டமன்றத் தேர்தல்
Subscribe to Oneindia Tamil
சண்டிகர்:பஞ்சாபில் நாளை சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடக்கிறது.
மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 115 தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடக்கிறது. கூடவே அமிர்தசரஸ் எம்பி தொகுதிக்கு இடைத் தேர்தலும்நடக்கிறது.
பஞ்சாபில் இப்போது முதல்வர் அம்ரீந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் கட்சியி ஆட்சியில் இருந்து வருகிறது. இந்தக் கட்சிக்கும் பாஜக-அகாலிதளம்கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது.
பஞ்சாப் மக்கள் தொகையில் சுமார் 25 சதவீதத்தினர் தலித்துகள் ஆவர். தனித்துப் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சியால் காங்கிரஸ் மற்றும் பாஜககூட்டணிக்கு பல தொகுதிகளில் பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது.
விலைவாசி உயர்வை முன்னிருந்தியே பாஜக கூட்டணி பிரச்சாரம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications