விஜய்காந்தின் தமிழ்: குமரிமுத்து பஹபஹா
சென்னை:ஒழுங்காக தமிழ் பேசக் கூடத் தெரியாத விஜயகாந்த் எல்லாம் கருணாநிதியை விமர்சிக்கக் கூடாது என காமெடி நடிகர் குமரிமுத்து கூறினார்.
சென்னை மாநகராட்சி மறு தேர்தலில் 54வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் நாகராஜனை ஆதரித்து திமுகவைச் சேர்ந்த சிரிப்பு நடிகர்குமரிமுத்து பிரசாரம் செய்தார்.
சினிமாவில் சிரிப்பதைப் போல பஹபஹாவென பயமுறுத்தும் சிரிப்பை சிந்தி விட்டு தனது பேச்சை ஆரம்பித்தார் குமபிமுத்து. அதேபோலபேச்சை முடித்தபோதும் ஒரு சிரிப்பை தூக்கிப் போட்டார்.
பிரசாரத்தின்போது குமரிமுத்து கொட்டியவை:
தம்பி விஜயகாந்த்தை எனக்கு நல்லாத் தெரியும். அவர் கட்சி ஆரம்பிக்கட்டும், தேர்தலில் போட்டியிடட்டும், கோட்டையைப் பிடிக்கட்டும்,முதல்வராகக் கூட ஆகட்டும். அப்படி நடந்தால் எங்களுக்கும் சந்தோஷம்தான்.
ஆனால் கலைஞரை விமர்சித்துப் பேச அவருக்கு எந்த தகுதியும் கிடையாது, உரிமையும் கிடையாது.
சொத்தைப் பாதுகாக்கத்தான் இப்போ கட்சி ஆரம்பித்திருக்கிறார். வருமான வரி சோதனை நடத்தியபோது செலவுக் கணக்கை எழுதி வைத்துக்கொள்ளவில்லை என்கிறார். நான் எல்லாம் வரியை ஒழுங்காக கட்டுகிறவன், இதனால்தான் தலை நிமிர்ந்து நடக்கிறேன்.
நடிகர் சங்கத்தில் 25 லட்சம் ரூபாய் கொள்ளை போனது குறித்து நெப்போலியன், சந்திரசேகர் கேட்ட கேள்விக்கு இதுவரை விஜயகாந்த் பதில்சொல்லவில்லை.
நான் ஆட்சிக்கு வந்தால் ரேஷன் பொருள் வீடு தேடி வரும் என்கிறார் விஜயகாந்த். எப்படி அது நடக்கும்? அப்புறம், தமிழகம் பூராவும் கொசுவைஒழிப்பேன் என்கிறார். முதலில் நடிகர் சங்கத்தில் அடைந்து கிடக்கும் கொசுக்களை ஒழிக்கட்டும்.
என்ன சாதனை செய்திருக்கிறார் விஜயகாந்த்? தமிழர்களுக்காக ஜெயிலுக்குப் போனதுண்டா? தமிழினத்திற்காகவே பாடுபட்டு வரும் கலைஞரைவிமர்சிக்க அவருக்கு என்ன தகுதி உள்ளது?
இப்போ, சரத்குமார் எந்தக் கட்சியிலும் சேர மாட்டேன் என்று கூறியுள்ளார். அதேபோல, இனிமேல் அரசியலே வேண்டாம் என கொஞ்ச நாளில்விஜயகாந்த்தும் கூறப் போகிறார்.
விஜய்காந்தால் வேஷம், விஷம் என்ற இரண்டு வார்த்தைகளை சரியாக உச்சரிக்க முடியுமா?. இப்படிப்பட்டவர், தமிழுக்காகவே பாடுபட்டு வரும்கருணாநிதியை தரக்குறைவாகப் பேசுகிறார். அவர் அப்படி பேசக் கூடாது. பேசினால், இயற்கை கூட மன்னிக்காது.
விஜயகாந்த் மவுசு எங்களுக்குத் தெரியும். அவருக்காக ஜூனியர் நடிகர், நடிகைகள் கூட பிரசாரத்துக்கு வர மாட்டார்கள் என்றார் குமரிமுத்து.
விஜயகாந்த் குறித்து பாக்யராஜ் ஜட்டி கதை
கணக்கு தெரியாது என்று கோமாளித்தனமாக கூறும் விஜய்காந்தை ஒரு போதும் மக்கள் ஏற்க மாட்டார்கள் என நடிகரும், இயக்குனருமானகே.பாக்யராஜ் கூறியுள்ளார்.
சென்னை மாநகராட்சி மறு தேர்தலில் ஐனநாயக முற்போக்கு கூட்டணி சார்பாக போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடந்தகூட்டத்தில் பாக்யராஜ் பேசுகையில்,
முதல்வர் கருணாநிதிக்கு பயம் என்று விஜய்காந்த் பேசியிருக்கிறார். இப்ப எனக்கு ஒரு கதை தான் ஞாபகத்துக்கு வருது. ஒரு யானையை பார்த்து,பக்கத்தில் வருமாறு சற்று தள்ளி நின்று கொண்டிருந்த சுண்டெலி சொன்னதாம். என்ன விஷயம் என்று யானை கேட்டதற்கு, உங்கிட்ட ஒருவிஷயம் கேட்கணும் என்று சுண்டடெலி சொன்னதாம்.
உடனே சுண்டெலி அருகே சென்று விஷயத்தை சொல் என்று யானை கேட்டதாம். அப்போது சுண்டெலி சொன்னதாம், ஒண்ணுமில்லை என்ஜட்டியை காணோம் அதை எடுத்து நீ போட்டுக்கிட்டியான்னு கேக்குறதுக்காகத்தான் கூப்பிட்டேன் என்று சொன்னதாம்.
இப்படித்தான் விஜய்காந்த பேச்சு இருக்கிறது. கணக்கு தெரியாது (வருமான வரி) என்கிறார் விஜய்காந்த். அப்படிப்பட்ட ஒருவர் எப்படி தமிழகபட்ஜெட்டான ரூ. 40,000 கோடி வரவு செலவை கையாளப் போகிறார்.? இப்படிப்பட்ட கோமாளியை நம்பி மக்கள் ஆட்சியைஒப்படைப்பார்களா? ஒருபோதும் மாட்டார்கள்.
அவர் சட்டசபைக்கு சென்று ஒருநாள் கூட பேசியதில்லை, வாசித்து விட்டுத்தான் வந்தார். ஒரு அறிஞர் சொன்னார், பறக்க முடிஞ்சா பற இல்ல, ஓடமுடிஞ்சா ஓடு, இல்ல நடக்க முடிஞ்சா நட, இல்ல தவழ முடிஞ்சா தவழ்ந்தாவது போ. எதுவுமே முடியாவிட்டால் உருண்டாவது போ என்றார்.
ஆனா சட்டசபை தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என்று எல்லவற்றிலும் தோல்வி கிடைத்தும் ஜெயலலிதா உருண்டு கூட வரவில்லை, குப்புற அடிச்சுபடுத்துக் கொண்டார்.
மீண்டும் மீண்டும் அவமானப்பட வேண்டாம் என்று தான் சென்னை தேர்தலிலே போட்டியிடவில்லை.
அந்த அம்மா இப்படியென்றால், தேர்தலுக்கு பின்னாடி ஒரு பெரிய மாற்றம் வரும்னு பிரசாரம் செய்த வைகோ இருக்கிற இடத்தையே காணோம்.இது மட்டும் தான் பெரிய மாற்றம் என்றார் பாக்யராஜ்.












Click it and Unblock the Notifications