பெங்களூர்-தமிழக பஸ்களுக்கு தொடர்ந்து தடை2 வாரமாக தமிழ் சேனல்கள்-சினிமாவும் இல்லை
பெங்களூர்:தமிழகத்தில் இருந்து கர்நாடகத்துக்கு வரும் தமிழக பஸ்கள் தொடர்ந்து ஒசூரிலேயே நிறுத்தப்பட்டு வருகின்றனர். இதனால் தமிழக பயணிகள்சொல்ல முடியாத துயரத்தை அனுபவித்து வருகின்றனர்.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பையடுத்து தமிழகத்தில் இருந்து வரும் அனைத்து பஸ்களுக்கும் லாரிகளுக்கும் பெங்களூரில் நுழைய தடைவிதிக்கப்பட்டது. பின்னர் லாரிகள் நள்ளிரவில் அனுமதிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து ஆம்னி பஸ்களுக்கு மட்டும் நகருக்குள் நுழைய அனுமதிதரப்பட்டது.
ஆனால், தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக பஸ்களுக்கு தடை தொடர்கிறது. இதனால் இந்த பஸ்கள் ஒசூரிலேயே நிறுத்தப்படுகின்றன.அங்கிருந்து ஜூஜூவாடி வழியாக கர்நாடக எல்லையான அத்திபலே வரை நடந்து வந்து பெங்களூர் செல்லும் டவுன் பஸ்களை பிடிக்க வேண்டியநிலைக்கு தமிழக பயணிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
பெட்டிகள், பைகளுடன் ஆண்களும், பெண்களும், முதியோரும், குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு 5 கி.மீ. தூரம் வரை நடந்தே ஆக வேண்டியகொடுமை இரண்டு வாரங்களாகத் தொடர்ந்து கொண்டுள்ளது.
அதே நேரத்தில் கர்நாடகத்தில் இருந்து இயக்கப்படும் அரசு பஸ்கள் தமிழகத்துக்குள் எந்தவிதமான சிக்கலும் இன்றி இயங்கி வருகின்றன.
தமிழ் சேனல்களுக்கும் தொடர்ந்து தடை:
அதே போல நடுவர் மன்றத் தீர்ப்பு வெளியான 5ம் தேதி நிறுத்தப்பட்ட தமிழ் டிவி சேனல்களின் ஒளிபரப்பும் இன்னும் மீண்டும் தொடங்கவில்லை.
இதனால் கடந்த இரு வாரங்களாக தமிழ் சேனல்களை பார்க்க முடியாமல் தமிழர்களை தவிக்க விட்டுள்ளனர்.
தமிழ் சினிமாவும் இல்லை:
அதே போல தமிழ் சினிமாக்களை திரையிடவும் தொடர்ந்து தடை நிலவுவதால் பல தியேட்டர்களில் இந்தி, தெலுங்கு படங்களை திரையிட்டுள்ளனர்.அதே நேரத்தில் கன்னட படங்களை இந்த தியேட்டர்கள் திரையிடவில்லை. காரணம், அதை பார்ப்பவர்கள் எண்ணிக்கை மிக மிக சொற்பம் என்பதுதான்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications