சமூக பாதுகாப்பு திட்டம்: 22ம் தேதி தொடக்கம்
சென்னை:விவசாயிகளுக்கான சமூக பாதுகாப்புத் திட்டத்தை முதல்வர் கருணாநிதி வருகிற 22ம் தேதி தஞ்சையில் தொடங்கி வைக்கிறார்.
விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் நலம் காக்க விவசாயிகள் விவசாயத் தொழிலாளர்கள் நல வாரியம் அமைக்கப்பட்டது.
இந்த வாரியத்திற்கு சட்டப் பாதுகாப்பு வழங்கும் வகையில், விவசாயத் தொழிலாளர்கள் விவசாயிகள் சமூக பாதுகாப்பு நல உதவிச் சட்டம்சட்டசபையில் இயற்றப்பட்டது.
இதையடுத்து தமிழகத்தில் உள்ள விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு ஏறத்தாழ 72 லட்சம் குடும்பங்களுக்குபுகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.
இத்திட்டத்தின்படி விவசாய தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் விபத்து நிவாரண உதவி, இயற்கை மரணம் நிகழ்ந்தால் உதவி, அவர்களின்குழந்தைகளுக்கான படிப்பு நிதியுதவி, மகன், மகள் ஆகியோரின் திருமணத்திற்கான உதவி;
கர்ப்பிணிப் பெண்களுக்கு 6000 ரூபாய் உதவித் தொகை, 60 வயது முதிர்ந்த விவசாயிகளுக்கு முதியோர் ஓய்வூதியம், ஈமச் சடங்கிற்கான உதவித்தொகை என பல்வேறு உதவிகளை வழங்கிடவும், நேரடியாக பயிரிடுதலை மேற்கொண்டுள்ள பதிவு பெற்ற பயிரிடும் குத்தகைதாரர்கள் இந்தஉதவிகளைப் பெரவும் சட்டத்தில் வழி செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்த முதல்வர் கருணாநிதி வருகிற 22ம் தேதி தஞ்சையில் நடைபெறும் நிகழ்ச்சியில் தொடங்கி வைத்து நலத் திட்ட உதவிகளைவழங்குகிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications