நளினி மகள் விவகாரம்-மத்திய அரசுக்கு நோட்டீஸ்
சென்னை:நளினியின் மகளை இந்தியாவில் தங்கி படிக்க ஏன் அனுமதிக்க கூடாது என்பது குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு சென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்ட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினியும், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள அவருடையகணவர் முருகனும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் உள்ள தங்கள் மகள் ஆரித்ராவுக்கு இந்தியாவில் தங்கி படிக்க விசா அளிக்கும்படி மத்திய அரசுக்கு இவர்கள் விண்ணப்பம் செய்தனர்.ஆனால் மத்திய அரசு அதை நிராகரித்தது. இதையடுத்து விசா அளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடும்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினிமனு தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து நளினி மேல் முறையீடு செய்தார். அதில் என்னுடைய மகள் ஆரித்ரா இந்தியாவில் தான் பிறந்தார். எனவே அவள்இந்தியாவில் தங்கி படிக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி ஏபி.ஷா, நீதிபதி சந்துருஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நளினி சார்பில் ஆஜரான வக்கீல் பிரசாத், நளினியின் மகள் ஆரித்ரா இந்தியாவில்தான் பிறந்தாள். நளினி சிறையில் இருக்கும்போதுஇந்த குழந்தை பிறந்தது. தற்போது அவளுக்கு 13 வயதாகிறது. படிப்பதற்காக ஆரித்ரா இலங்கை சென்றாள். இப்போது இந்தியாவில் தங்கி படிக்கவிரும்புகிறாள். அதற்கு அனுமதிக்க வேண்டும் என அவர் வாதாடினார்.
மத்திய அரசு சார்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் பி.வில்சன், ஆரித்ரா இலங்கை குடியுரிமை பெற்றுள்ளார். தற்போது அவர் நார்வேநாட்டில் படிப்பதற்காக அவர் சென்று விட்டதாக பத்திரிக்கைகளில் செய்தி வந்துள்ளது. ஆரித்ராவின் இலங்கை குடியுரிமையை ரத்து செய்து விட்டு,இந்திய குடியுரிமை கேட்டு மனு செய்தால் பரிசீலனை செய்வோம். எனவே அவருக்கு இப்போது விசா வழங்க முடியாது என்று வாதாடினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஆரித்ராவுக்கு இந்தியாவில் தங்கி படிக்க ஏன் அனுமதி அளிக்கக் கூடாது என்பதற்கு வரும் 16ம்தேதிக்குள் பதில் அளிக்கும்படி மத்திய அரசு உத்தரவிட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications