பங்குகள் வெளியிடும் ராஜ் டிவி
சென்னை:தமிழ் தனியார் தொலைக்காட்சிகளில் 2வது இடத்தில் இருக்கும் ராஜ் டிவி பங்கு மார்க்கெட்டில் குதித்துள்ளது.
இதுகுறித்து ராஜ் டிவி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எம்.ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒரு ஷேர் மதிப்பு ரூ. 10 என்ற அளவில்தொடக்கத்தில் 35 லட்சத்து 68 ஆயிரத்து 250 பங்குகளை வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். ராஜ் டிவி நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகளுக்காகபங்கு மார்க்கெட்டில் கால் எடுத்து வைக்கிறோம்.
தயாரிப்பு வசதிகள், நிகழ்ச்சிகள், புதிய இளைஞர் சானல், சர்வதேச சந்தையில் தற்போதுள்ள சேனல்களை பிரபலப்படுத்துவது, குறும்படங்கள்,டெலிபிலிம் தயாரிப்பு, ரூ. 7.15 கோடி மதிப்பிலான புதிய நவீன ஸ்டுடியோ அமைப்பது உள்ளிட்ட பணிகளுக்கு இந்தப் பங்குககள் மூலம் நிதிதிரட்டப்படும்.
ஒவ்வொரு சம பங்குக்கும் ரூ. 221 முதல் ரூ. 257 வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று (14ம் தேதி) இந்த பங்குககள் விற்பனைக்குவருகின்றன. பிப்ரவரி 23ம் தேதி பங்குகளை வாங்க விண்ணபிக்க கடைசி நாளாகும்.
மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் இந்த பங்குகள் பட்டியலிடப் பட்டுள்ளன.
இந்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதத்திற்குள் 14 முதல் 40 வயதுக்குட்பட்டோருக்கான புதிய இளைஞர் சானல் தொடங்கப்படவுள்ளது.அதேபோல நவீன முறையில் வடிவமைக்கப்படவுள்ள ஸ்டுடியோவும் இந்த ஆண்டுக்குள் திறக்கப்படும் என்றார் ராஜேந்திரன்.
நிறுவனத்தின் துணைத் தலைவர் சத்யப்பிரகாஷ் கூறுகையில், கடந்த 2005-06ம் ஆண்டு ராஜ் டிவி ரூ. 31.95 கோடி வருமானம் ஈட்டியது. அதற்குமுந்தைய ஆண்டு அது 29.64 கோடியாக இருந்தது. கடந்த டிசம்பர் வரை மொத்த வருமானம் ரூ. 30 கோடியாக இருந்தது. இந்த நிதியாண்டுக்குள்கடந்த ஆண்டை விட கூடுதலான வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications