ராட்சத சிமென்ட் குழாய் விழுந்து 3 பேர் பலி
சென்னை:சென்னை அருகே ராட்சத சிமெணட் குழாய் கீழே விழுந்ததில் அதில் சிக்கி 3 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாயினர்.
சென்னை அருகே பள்ளிக்கரணை, கைவேலி பகுதியில், தாழ்வாக செல்லும் மின்சார ஒயர்களை அகற்றி விட்டு அவற்றை உயரமான இடத்திற்குமாற்றும் பணியில் மின்வாரியம் இறங்கியுள்ளது.
இதற்காக பள்ளண் தோண்டப்பட்டு அதில் மின்சாரக் கம்பங்களை நிறுவ ராட்சத சிமெண்ட் குழாய் பதிக்கும் பணியில் தனியார் நிறுவனம் ஒன்றுஈடுபட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக இப்பணி நடந்து வருகிறது.
நேற்று இந்தப் பணி நடந்து கொண்டிருந்தபோது திடீரென பள்ளத்தில் சரிவு ஏற்பட்டு ராட்சத குழாய் தொழிலாளர்கள் மீது விழுந்தது. இதில், 4பேர் சிக்கிக் கொண்டனர். உடனடியாக தீயணைப்புப் படையினர் விரைந்து வந்தனர்.
குழாய்க்கு அடியில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணி வேகமாக நடந்தது. இதில், ஆரோக்கியசாமி என்பவர் படுகாயத்துடன் உயிருடன்மீட்கப்பட்டார். வனத்தையன், சகாயம், பாட்சா ஆகியோர் பலியாகி விட்டனர். இவர்களில் வனத்தையன் உடல் மட்டும் மீட்கப்பட்டது. மற்றஇருவரின் உடல்களும் குழாய்க்கு அடியில் சிக்கி நசுங்கி விட்டன. அவர்களின் உடல்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இருவரது உடல்களையும் மீட்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பலியான 3 பேரும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications