காவிரி-கன்னட சாப்ட்வேர் என்ஜினியர்கள்போராட்டம்: பதவி விலகினார் அம்பரீஷ்
பெங்களூரு:காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் கர்நாடக உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள்கெரோ செய்ததால், தனது மத்திய அமைச்சர் பதவியை கர்நாடகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. அம்பரீஷ் நேற்று ராஜினாமா செய்தார். எம்.பி.பதவியிலிருந்தும் அவர் விலகினார்.
கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியைச் சேர்ந்தவர் அம்பரீஷ். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு மிகவும் நெருக்கமான நண்பர். ரஜினியின் பலபடங்களின் கர்நாடக ரிலீஸ் உரிமையை அவர்தான் வாங்குவது வழக்கம் (சிவாஜி பட உரிமை மட்டும் வேறு ஒருவருக்குப் போய் விட்டதாம்).ப்ரியா உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களில் ரஜினியுடன் நடித்துள்ளார்.
காவிரிப் பிரச்சினை தலை தூக்கும்போதெல்லாம் கர்நாடக விவசாயிகளுக்காக குரல் கொடுக்கத் தவறாதவர். தற்போது காங்கிரஸ் கட்சியின் சார்பில்மாண்டியா தொகுதி எம்.பியாக உள்ளார். சில மாதங்களுக்கு முன்பு செய்தி ஒலிபரப்புத் துறை இணை அமைச்சராகப் பதவியேற்றார்.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து மைசூர், மாண்டியா, சாம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்களில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.இதைத் தொடர்ந்து, விவசாயிகளுக்காக எனது அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்யத் தயார் என்று கூறி வந்தார் அம்பஙுஷ்.
இந்த நிலையில், நேற்று கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்தின் பொன் விழாவையொட்டி சிறப்பு தபால் தலை வெளியிடும் நிகழ்ச்சி பெங்களூரில்நடந்தது.
இதில் கலந்து கொள்ள அம்பரீஷ் வந்தார். அப்போது வக்கீல்கள் கும்பலாக அவரைச் சுற்றிச் சூழ்ந்து காவிரிப் பிரச்சினைக்காக அமைச்சர் பதவியைராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி கோஷமிட்டனர்.
போலீஸார் தலையிட்டு அம்பரீஷை மேடைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் நிகழ்ச்சியில் அம்பரீஷ் பேசுகையில், எனக்கு கடவுள்எல்லாவற்றையும் கொடுத்துள்ளான். எந்தக் குறையும் வைக்கவில்லை. செல்வாக்கிலும் குறையில்லை.
ரசிகர்களால் நான் சினிமாவில் புகழ் பெற்றேன். அரசியலிலும் நல்ல நிலைக்கு வந்தேன். பதவி ஆசை எனக்குக் கிடையாது. எனது மத்தியஅமைச்சர் பதவி மற்றும் எம்.பி. பதவியை நான் ராஜினாமா செய்து விட்டேன்.
இதுதொடர்பான கடிதங்களை பிரதமர் மன்மோகன் சிங், சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி ஆகியோருக்கு பேக்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளேன்.அதன் நகல்களை, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பியுள்ளேன் என்றார் அம்பரீஷ்.
நிகழ்ச்சி முடிந்ததும், அரசுக் காரைப் புறக்கணித்து விட்டு தனது சொந்தக் காரில் வீடு திரும்பினார் அம்பரீஷ்.
மாண்டியா தொகுதியிலிருந்து 3 முறை எம்.பி. ஆனவர் அம்பரீஷ். காவிரிப் பிரச்சினைக்காக ஒரு மத்திய அமைச்சர் தனது பதவியை தூக்கிஎறிவது இது இரண்டாவது முறையாகும். சில வருடங்களுக்கு முன்பு மத்திய அமைச்சராக இருந்த வாழப்பாடி ராமமூர்த்தி காவிரிப் பிரச்சினையில்அப்போதைய பிரதமர் நரசிம்மராவின் அலட்சியப் போக்கைக் கண்டித்து தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது நினைவிருக்கலாம்.
ராஜினாமா கடிதம் சரியில்லை: சோம்நாத் சாட்டர்ஜி
இதற்கிடையே, அம்பரீஷீன் ராஜினாமாக் கடிதம் முறையாக, ஏற்புடையதாக இல்லை என்று கூறி அவரது எம்.பி. பதவி ராஜினாமா கடிதத்தை ஏற்கசபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி மறுத்து விட்டார்.
தனது எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்த அம்பரீஷ் இதுதொடர்பாக பேக்ஸ் மூலம் சாட்டர்ஜிக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அந்தக் கடிதம்ஏற்றுக் கொள்ளத் தக்க வகையில், இல்லை என்பதால் அதை சபாநாயகர் நிராகரித்து விட்டதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ராஜினாமா செய்வதாக இருந்தால் எனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறேன் அல்லது சொந்தக் காரணங்களுக்காக ராஜினாமா செய்கிறேன்என்ற வாசகங்கள் மட்டுமே கடிதத்தில் இடம் பெற்றிருக்க வேண்டும் என்பது விதி. அக்கடிதத்தில் வேறு எந்தக் காரணமும் கூறக் கூடாது.
கன்னட சாப்ட்வேர் என்ஜினியர்கள் போராட்டம்:
இந் நிலையில் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து கன்னட சாப்ட்வேர் என்ஜினியர்கள் பெங்களூரில் போராட்டம் நடத்தவுள்ளனர்.
வரும் 19ம் தேதி எம்.ஜி. ரோட்டில் உள்ள காந்தி சிலை அருகே காலை 10 மணிக்கு இந்தப் போராட்டம் நடக்கிறது. இதில் பங்கேற்கவிரும்புவோருக்காக கன்னட சாப்ட்வேர் என்ஜினியர்கள் ஒரு மெயில் ஐடியையும் ([email protected]) உருவாக்கியுள்ளனர்.
இதுவரை இதுபோன்ற சிக்கலான பிரச்சனைகளில் சாப்ட்வேர் என்ஜினியர்கள் தலையிட்டதில்லை. இப்போது அதை இவர்கள் ஆரம்பித்து வைக்கப்போகின்றனர்.












Click it and Unblock the Notifications