காவிரி-ரஜினி அமைதி ஏன்: பாஜக விளக்கம்
சென்னை:ஓட்டுக்காக மதம் சார்ந்த அரசியல் நடத்துகிறார்கள் என்று தமிழக பாரதீய ஜனதா பொதுச் செயலாளர் டாக்டர் தமிழிசை செளந்திரராஜன்கூறியுள்ளார்
நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
இன்று உயர் நீதிமன்றத்தில், சென்னை மாநகராட்சி மறுதேர்தல் தொடர்பாக எங்கள் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.அதில் கடந்த தேர்தலை போல இந்த தேர்தலிலும் வன்முறை ஏற்படாமல் தடுக்க வாக்குச் சாவடிகளிலும் ஓட்டு எண்ணும் இடங்களிலும் வீடியோகேமராக்கள் பொறுத்தப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தலில், ஆளுங்கட்சிக்கு மாற்றாக பாஜகவை தான் மக்கள் தேர்வு செய்யவேண்டும்.
விஜயகாந்த் வசனம் பேசுகிறாரே தவிர, பண்பட்ட அரசியல் நடத்த தெரியவில்லை. ஆளும் கட்சியை போலவே, வேட்பாளர்களை மிரட்டும்வேலைகளில் அவரும் ஈடுபடுகிறார். நல்ல அரசியல் நடத்துவதாக இருந்தால் தனது வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது அவர்களைதொண்டர்களை விட்டு தாக்கியிருக்க மாட்டார். தனது மண்டப பிரச்சனையிலும் சுயநல உணர்வோடுதான் செயல்படுகிறார்.
ஆன்-லைன் வர்த்தகத்தால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதுடன் லட்சக்கணக்கான சிறு வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காவிரி பிரச்சனையில் தீர்ப்பை ஆழ்ந்து படிக்காமல் ஆளும் கட்சியினரே அவசரப்பட்டு பாராட்டினர். ஆனால் இப்போது மேல்முறையீடுசெய்வோம் என்கிறார்கள். நடுவர் மன்ற தீர்ப்பில் தமிழ்நாடு பயன்பெறவுமில்லை, கர்நாடகம் வஞ்சிக்கப்படவும் இல்லை. 2 மாநில விவசாயிகளின்நலன் கருத்தில் கொண்டு தேசிய சிந்தனையோடு இந்த பிரச்சனையை அணுக வேண்டும். தன் மாநில மக்களுக்காக மத்திய அமைச்சர் அம்பரீஷ்ராஜினாமா செய்துள்ளார். ஆனால் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களுக்கு அந்த உணர்வு இல்லை.
நடிகர் ரஜினிகாந்த் தேசிய சிந்தனை உள்ளவர், எனவே காவிரி பிரச்சனையை அரசியல் ஆக்க வேண்டாம் என அமைதியாக இருப்பார் எனகருதுகிறேன்.
மும்பை, சென்னை பங்கு சந்தைகள் தீவிரவாதிகளின் ஆக்கிரமிப்பில் வந்துள்ளன. தினமும் வெடி மருந்துகள், ஆயுதங்கள் தமிழ்நாட்டில்பிடிப்படுகிறது. தீவிரவாதிகளை கட்டுபடுத்த தமிழக அரசு தவறிவிட்டது.
பொடா சட்டத்திற்கு மாற்று சட்டத்தை இதுவரை மத்திய அரசு கொண்டு வரவில்லை. தீவிரவாதத்தை ஒடுக்காமல் இலவச திட்டங்களை அறிவித்துமக்களை ஏமாற்றுகிறார்கள் என்றார் தமிழிசை.
இவர் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications