பல்லை காட்டும் பூனையும் விஜய்காந்தும்!
சென்னை:உலகத்தில் இருப்பவர்கள் எல்லாம் ஊழல் பேர்வழிகள் போலவும், தான் ஒருவன் தான் உத்தமன் என்பதைப் போலவும் பேசும் விஜய்காந்த்முதலில் தன்னை திருத்திக் கொள்ள வேண்டும் என முதல்வர் கருணாநிதி கூறினார்.
தேமுதிகவின் தென் சென்னை மாவட்டச் செயலாளர் கிண்டி வேணு தலைமையில் அக் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 1,500பேர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
அறிவாலயத்தில் நடந்த இந் நிகழ்ச்சியில் கருணாநிதி பேசுகையில்,
உண்மையான திராவிட இயக்கத்தில் தான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வந்துள்ளீர்கள். இன்று சிலர் அவர்களுடைய வேலைகள்எல்லாம் முடிந்து, அவர்களின் தொழில் எல்லாம் முடியும் தருவாயில் அடுத்த தொழில் என்ன என்று பார்த்து அரசியல் தொழிலைதேர்ந்தெடுக்கின்றனர்.
அரசியலில் இன்னும் அரிச்சுவடியைக் கூட படிக்காதவர்கள் எல்லாம் கட்சிகளை ஆரம்பித்துக் கொண்டு இந்த நாட்டை ஆளப்போகிறேன்என்கின்றனர். மற்ற கட்சித் தலைவர்களை புண்படுத்திப் பேசுவதையும் தவறான விமர்சனங்களை
வெளியிடுவதையும் தங்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
புதுக்கட்சித் தலைவர்," கருணாநிதி போடுகின்ற அரிசியை பூனைதான் சாப்பிடுகிறது, என்கிறார். பூனை அரிசி சாப்பிடும் ஆச்சரியத்தை அவர்கள்சொல்லித்தான் நான் கேள்விப்படுகிறேன். ஒரு சமயம், பூனை பல்லை காட்டும் போது அது அரிசி போல தெரியும்.அதைப் பார்த்து விட்டு, அரிசியை தின்று விட்டு வாயைப் பிளக்கிறது போலும் என்று அவர் கருதிக்கொண்டிருக்கிறாரோ என்னவோ எனக்குத் தெரியவில்லை.
எது எதை மக்களிடம் பேசுவது, எதை பேசக் கூடாது என்பதைப் பற்றிக் கூடத் தெரியாமல், அரசியலில்இன்னும் அரிச்சுவடியைக் கூடப் படிக்காதவர்கள் எல்லாம் கட்சியைஆரம்பித்துக் கொண்டு, நான் தான் நாளைநாட்டை ஆளப் போகிறேன் என்று ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
உலகத்தில் இருப்பவர்கள் எல்லாம் ஊழல் பேர்வழிகள் போலவும் தான் ஒருவன் தான் உத்தமன் என்பதைப் போலவும், எல்லோரும் என்னிடம்வாருங்கள் என்று அழைக்கின்றார்.
இவர்கள் மற்றவர்களின் ஊழலை திருத்துவது இருக்கட்டும். முதலில் இவர்கள் தங்களை திருத்திக் கொள்ளவேண்டும் என்பதுதான் நாம் அவர்களிடம் எதிர்பார்க்கிற மிக முக்கியமான பண்பாகும்.
கள்ளக் கணக்கு, வருமான வரி ஊழல் இவற்றைப் பற்றியெல்லாம் இவர்கள் பேசுகிறார்கள். ஆனால்தங்களுடைய சொந்த சுய லாபத்தைப் பற்றித்தான் சிந்திக்கிறார்கள்.
தனது வீட்டிலே வருமான வரி சோதனை, கணக்கு கேட்க யாராவது வந்தால் அதற்காகத் துடிக்கிறார்கள்,துள்ளுகிறார்கள்.
தன்னுடைய இடம் பொது நலனுக்காக, பொதுச் சாலைக்காக மத்திய அரசால் எடுத்துக் கொள்ளப்பட்டால் அதுஏதோ வேண்டும் என்றே செய்யப்படுகின்ற ஒரு காரியம் என்று இன்றைய தினம் பேசுகிறார்கள்.
பொது மக்களுக்கு, போக்குவரத்தை சரி செய்ய வேண்டும் என்கிற நல்ல எண்ணம் இல்லாமல், தங்களைப்பற்றியே சிந்திக்கின்றவர்கள் அவர்கள். உங்களைப் பற்றி நிச்சயம் சிந்திக்க மாட்டார்கள் என்பதை நீங்கள் மனதில்வைத்துக் கொள்ள வேண்டும் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications