மனித குண்டு பெல்ட்-துப்பாக்கியுடன் சிக்கிய படகு3 புலிகள் உள்பட 5 பேர் கைது-யாருக்கு குறி?
கோடியக்கரை:நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே இலங்கையைச் சேர்ந்த படகில் மனித வெடிகுண்டுக்கான ஜாக்கெட், துப்பாக்கி, கிரனைட் குண்டுகள்உள்ளிட்ட பெரும் ஆயுதக் குவியல் சிக்கியது. இதுதொடர்பாக 3 இலங்கைத் தமிழர்கள் உள்பட 5 பேரை கடலோரக் காவல் படையினர்வளைத்துப் பிடித்துள்ளனர்.
விடுதலைப் புலிகளுக்கும், இலங்கைப் படையினருக்கும் இடையே நடந்து வரும் மோதல்கள் அதிகரித்து வருவதால், தமிழக கடலோரப்பகுதிகளில் கடற்படையினரும், கடலோரக் காவல் படையினரும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.சமீபத்தில் மும்பையிலிருந்து தூத்துக்குடி வழியாக இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த கண்ணி வெடி தயாரிக்கப் பயன்படும் பால் பியரிங்மூடைகளை சென்னையில் கியூ பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இந் நிலையில் நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே பயங்கர ஆயுதங்களுடன் இலங்கைக்கு சென்று கொண்டிருந்த படகை கடலோரக் காவல்படையினர் வளைத்துப் பிடித்துள்ளனர்.
கோடியக்கரையிலிருந்து 27 கடல் மைல் தொலைவில் கடலோரக் காவல் படையின் "ரமா தேவி என்ற கப்பல் ரோந்துப்பணியில் ஈடுபட்டபோது அப்பகுதியில் வந்த ஸ்ரீ ராமஜெயம் என்ற படகை நிறுத்துமாறு உத்தரவிட்டனர்.
ஆனால், படகு நிற்காமல் தப்ப முயன்றது. இதையடுத்து வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு படகைநிறுத்தினர். இதைத் தொடர்ந்து படையினர் படகில் ஏறி சோதனையிட்டனர்.
படகில் ஒரு ஏ.கே. 56 ரக துப்பாக்கி, 124 ரவுண்டு சுடக் கூடிய குண்டுகள், 5 கையெறி குண்டுகள், மனித வெடிகுண்டாக செயல்படுவோர்பயன்படுத்தக் கூடிய 7 கிலோ எடையுடைய ஜாக்கெட், 5 டெட்டனோட்டர்கள், 8 டிரம்கள் (ஒவ்வொரு டிரம்மிலும் 55 லிட்டர்) நிறைய இருந்ததிரவ வேதிப்பொருள் ஆகியவை இருந்தன.
இதுதவிர சாட்டிலைட் போன், படகுக்கு பாதை காட்டி வழி நடத்திச் செல்லும் குளோபல் பொசிசனிங் கருவி ஆகியவையும் இருந்தன. இதைத்தவிர அரிசி, பருப்பு என உணவுப் பொருட்களும் இருந்தன.
இதையடுத்து படகில் இருந்த சகாயம் (44), ஆறுமுகம் (53), அருமைநாயகம் புருஷோத்தமன் (28) ஆகிய இலங்கை தமிழர்களையும்சிவபத்மநாபன் (31), ராமச்சந்திரன் (42) ஆகிய தமிழகத்தைச் சேர்ந்தவர்களையும் கைது செய்தனர்.
இதில் இலங்கையை சேர்ந்த மூன்று பேரும் விடுதலைப் புலிகளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அந்த ஐந்து பேரையும் "ரமா தேவி கப்பலுக்கு கொண்டு வந்த கடலோரக் காவல் படையினர் அவர்களிடம்விசாரணை நடத்தியபோது இதை கடலூரில் ஒருவரிடம் ஒப்படைக்க வந்தோம் என்றனர்.
இதைத் தொடர்ந்து அவர்களும், அந்தப் படகும் சென்னைக்கு கொண்டு வரப்பட்டன.
இதுகுறித்து கடலோரக் காவல் படையின் கிழக்குப் பிராந்திய கமாண்டர் ராஜேந்திர சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், எங்களுக்குக் கிடைத்தரகசியத் தகவலைத் தொடர்ந்து பாக் ஜலசந்தி பகுதியில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தோம்.
அப்போது கடலோரக் காவல் படையின் ரமாதேவி கப்பலின் ரேடாரில் ஒரு படகு செல்வது தெரிய வந்தது. இதையடுத்து அந்த படகைநெருங்கினோம். படகை நிறுத்துமாறு எச்சரிக்கை விடுத்தபோது படகு நிற்காமல் வேகமாக செல்லத் தொடங்கியது.
அது மிகவும் அதி நவீனமான பைபர் கிளாஸ் படகாகும். பின்னர் துப்பாக்கியால் சுட்டு அந்தப் படகை நிறுத்தினோம். இதையடுத்து படகில்இருந்தவர்கள் படகை நிறுத்தி சரணடைந்தனர்.
பிடிபட்ட வெடிபொருட்கள் மூலம் பேரழிவை ஏற்படுத்தக் கூடிய ஆயுதங்களைத் தயாரிக்க முடியும்.
இந்தப் படகு இலங்கையைச் சேர்ந்த படகாகும். மிகவும் நவீனமான படகு, சமீபத்தில்தான் இது வாங்கப்பட்டதாக தெரிகிறது.
பிடிபட்டவர்களை தமிழக கியூ பிரிவு போலீஸா>டம் ஒப்படைத்துள்ளோம். பிடிபட்டவர்களிடம் மத்திய உளவுப் பி>வு, சிபிஐ, மாநில உளவுத்துறை,காவல்துறை, கடலோர் காவல் படை ஆகியோர் கூட்டாக விசாரிக்கவுள்ளனர்.
பெருமளவில் வெடிபொருட்கள் பிடிபட்டுள்ளதால் கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பு மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றார் ராஜேந்திர சிங்.
வெடிபொருட்களை படகில் போட்டு விட்டு அதற்கு மேல் வெங்காயம், சர்க்கரை, அ>சி, தேங்காய், ஸ்டவ் மற்றும் சமையலுக்குத் தேவையான பலபொருட்களையும் போட்டு மூடி வைத்து கொண்டு சென்றுள்ளனர்.
இவர்களிடம் பிடிபட்ட தற்கொலைத் தாக்குதலுக்கான பெல்ட் தான் பலவித சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.இந்தியாவில் யாரோ ஒரு விவிஐபி தீர்த்துக் கட்டவே இந்த பெல்ட் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த மனித வெடிகுண்டு ஜாக்கெட்டை அணிந்து கொண்டு தற்கொலைப் படைத் தாக்குதலை நடத்தினால் பல உயிர்கள் பலி போகும் அளவுக்குஅது சக்தி வாய்ந்த ஜாக்கெட் என்று கூறப்படுகிறது.
இந்த பெல்ட்டை புலிகள் தான் வடிவமைத்திருக்க வேண்டும் என மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர்தெரிவித்துள்ளார்.
படகு ஓனர் அடையாளம் தெரிந்தது:
இந் நிலையில் பயங்கர ஆயுதங்களுடன் பிடிபட்ட படகின் உ>மையாளர் யார் என்ற அடையாளம் தெரிய வந்துள்ளது.
இப் படகு தூத்துக்குடியில் வாங்கப்பட்டுள்ளது. சாதாரண மீன் பிடி படகை பல்வேறு வசதிகளுடன் கூடிய படகாக மாற்றியுள்ளனர். பார்ப்பதற்கு மீன் பிடி படகு போலவே காணப்படும். ஆனால் அதிவேகத்தில் செல்லக் கூடிய வகையில் அதன் என்ஜின் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
படகின் உரிமையாளர் தனுஷ்கோடியைச் சேர்ந்த கோமாளி என்பவரின் மகன் முத்தீஸ்வரன் (வயது 25) எனத் தெரிய வந்துள்ளது.
முத்தீஸ்வரனும் அவரது கூட்டாளிகளும் நீண்ட காலமாக ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது முத்தீஸ்வரன் தலைமறைவாகி விட்டார். அவர்இலங்கைக்குத் தப்பியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
எஸ்.பிக்களுடன் டிஜிபி ஆலோசனை:
இந் நிலையில் ஆயுதங்கள் கடத்துவது அதிகரித்து வருவது குறித்து 13 மாவட்ட எஸ்பிக்களுடன் டிஜிபி முகர்ஜி இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார்.
இதில் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி கேவிஎஸ். மூர்த்தி, உளவுப் பி>வு கூடுதல் டிஜிபி நாஞ்சில் குமரன், சென்னை ஆணையர் லத்திகா சரண் மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், தஞ்சாவூர்,நாகப்பட்டனம், திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய 13 மாவட்ட எஸ்.பிக்களும் கலந்து கொள்கின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications