காதலிக்க வற்புறுத்தி மாணவி அறையில் அடைப்பு!
புதுச்சேரி:சட்டக் கல்லூரி மாணவியை வகுப்பறையில் அடைத்து வைத்து காதலிக்க வற்புறுத்திய ஐந்து மாணவர்களைபோலீஸார் வலை வீசித் தேடி வருகின்றனர்.
திண்டிவனம் அருகே நாகலாபுரத்தைச் சேர்ந்தவர் கண்ணன். கிராம நிர்வாக அதிகாரியாக உள்ளார். இவரதுமகள் பிரேம சங்கீதா (வயது 18) புதுச்சேரி அரசு சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இதே கல்லூ>யில் இறுதி ஆண்டு படித்து வரும் முகம்மது உசேன், புஷ்பராஜ், தமிழரசன், வசந்தன்,திருகாமேஸ்வரன் ஆகிய ஐந்து பேரும் நெருங்கிய நண்பர்கள். இவர்களில் திருகாமேஸ்வரன், பிரேமசங்கீதாவைக் காதலித்துள்ளார். ஆனால் அதை சங்கீதா ஏற்கவில்லை.
இந்த நிலையில் காதலர் தினமான செவ்வாய்க்கிழமையன்று மாலை 3 மணிக்கு பிரேம சங்கீதா தனதுவகுப்பறையில் இருந்துள்ளார். அப்போது திருகாமேஸ்வரன் அண்ட் கோ அங்கு வந்துள்ளது.
அங்கிருந்து சங்கீதாவை தங்களது வகுப்பறைக்கு கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றனர். திருகாமேஸ்வரனைகாதலிக்குமாறு கூறி பிரேம சங்கீதாவை, நண்பர்கள் நான்கு பேரும் வற்புறுத்தியுள்ளனர். ஆனால் அவர்மறுக்கவே, கோபமடைந்த அவர்கள் சங்கீதாவை வகுப்பறைக்குள் வைத்துப் பூட்டி விட்டனர்.
பயந்து போன பிரேம சங்கீத கூச்சல் போட்டு அலறியுள்ளார். இதையடுத்து கல்லூரி வாட்ச்மேன் அங்கு வந்துகதவைத் திறந்து சங்கீதாவை மீட்டார்.
பின்னர் கல்லூரி முதல்வரிடம் அழைத்துச் சென்றார். அவரிடம் கதறி அழுது கொண்டே நடந்ததைக் கூறினார்பிரேம சங்கீதா.
இதைத் தொடர்ந்து காலாப்பட்டு போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. இதை அறிந்த ஐந்து மாணவர்களும்தலைமறைவாகி விட்டனர். அவர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications