கடலூரில் ரூ1000 கோடியில் கப்பல் கட்டும் தளம்
சென்னை:கடலூர் அருகே ரூ. 1,000 கோடி முதலீட்டில் புதிய கப்பல் கட்டும் தளம் அமைக்கப்படுகிறது. இதற்கானஒப்பந்தம் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் இன்று கையெழுத்தானது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கடலூர் அருகே உலக தரம் வாய்ந்த கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்கு சென்னையில் உள்ள குட் எர்த்மேரிடைம் லிமிடெட் என்ற நிறுவனம் மற்றும் அதன் தொழில் நுட்ப ஆலோசனை நிறுவனமான கொரியாமேரிடைம் ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் கடந்த ஆண்டு நவம்பர் 7-ம் தேதி முதலமைச்சரை சந்தித்துபேசினர்.
இது தொடர்பான கருத்துருவை தமிழ்நாடு கடல் சார் வாரியம் பரிசீலித்து கொள்கை அளவிலான ஒப்புதலைவழங்கியது. அதன் தொடர்ச்சியாக இன்று தமிழ்நாடு கடல் சார் வாரியத்திற்கும், குட் எர்த் கப்பல் கட்டும்நிறுவனத்திற்கும் இடையே ஒப்பந்தம் தலைமை செயலகத்தில் முதல்வர் கருணாநிதி முன்னிலையில்கையெழுத்தானது.
மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன்மற்றும் அதிகாரிகள், குட் எர்த் நிறுவனத்தின் தலைவர் அனந்தன், அதன் நிர்வாக இயக்குனர் மதன் மற்றும்கொரியா மேரிடைம் நிறுவன அதிகாரிகள் உடனிருந்தனர்.
இந்த ஒப்பந்தத்தின்படி குட் எர்த் நிறுவனம் ரூ. 1,000 கோடி முதலீட்டில் கடலூரில் கப்பல் கட்டும் தளம்அமைக்கும். முதல் கட்டமாக 500 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படுகிறது.
இதன் மூலம் 5,000 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும், 20,000 பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பும்கிடைக்கும். 3 ஆண்டுகளில் திட்டப் பணிகள் முடிவடைந்து கடலூரில் கப்பல் கட்டும் தொழில் தொடங்கும்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications