அய்யா, அம்மா போதும், இனி அண்ணனுக்கு!

Subscribe to Oneindia Tamil

சென்னை:அம்மாவை நம்பி வாக்களித்திருக்கிறீர்கள், அய்யாவையும் நம்பி வாக்களித்திருக்கிறீர்கள். இனிமேல் இந்தஅண்ணனுக்கு வாக்களியுங்கள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்தின்போது கோரிக்கைவிடுத்தார்.

சென்னை மாநகராட்சி மறு தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ள விஜயகாந்த் 6வது நாளாக இன்றும்அனல் பறக்க பிரசாரம் செய்தார். வட சென்னைக்குட்பட்ட துறைமு.கம், ராயபுரம், ஆர்.கே.நகர் பகுதிகளில்பிரசாரம் மேற்கொண்டு விஜயகாந்த் பேசியதாவது:

என்னை அரசியலிலிருந்து ஒழிக்க கல்யாண மண்டபத்தை இடிக்கப் பார்க்கிறார்கள். பொது நலனில் அக்கறைஉள்ளவன் நான். மக்களுக்காக மண்டபத்தை மட்டுமல்ல எதையும் இழக்கத் தயாராகத்தான் உள்ளேன்.

1990ல் பொது மக்களுக்காக எனது இரண்டரை ஏக்கர் நிலத்தை அரசு கேட்டது. பொது நலனில் அக்கறைஇருந்ததால் உடனேயே அதைக் கொடுத்தேன்.

கருணாநிதியை நான் கேட்கிறேன், அண்ணா அறிவாலயம் அமைந்துள்ள இடத்தின் ஒரு கிரவுண்ட்நிலத்தையாவது பொது மக்களுக்காக, பொது நலனுக்காக கொடுக்க அவர் தயாரா.?

பொது நலனில் அக்கறை உள்ளவர்களாக காட்டிக் கொள்ளும் அவர்கள், சன் டிவி மூலம் 10,000 கோடி ரூபாய்லாபம் ஈட்டுவதாக கூறப்படுகிறது. அப்படி இருக்கும்போது ஏன் கேபிள் டிவி நிறுவனங்களைஅரசுடமையாக்காமல் உள்ளனர்.

மக்களிடம் வரி என்ற பெயரில் பணத்தை வசூலித்து விட்டு இலவசத் திட்டங்கள் என்ற பெயரில் மீண்டும்அவர்களுக்கே கொடுப்பதற்குப் பெயர்தான் பொது நலனா?

அரசியல் என்பதே ஒரு பொது சேவைதான். நான் 25 ஆண்டுகளாக ஏழை மக்களுக்காக உதவி வருகிறேன்.

அரசியலைத் தொழில் என்கிறார். என்னைக் குறை கூறுகிறவர்களுக்கு அது தொழில்தான். ஆனால் எனக்கோஅது சேவை.

சினிமாத் துறையினர் எடுத்த மாபெரும் விழாவால்தான் 1996 முதல் 2001 வரை ஐந்து ஆண்டு காலம்முழுமையாக ஆட்சி நடத்த முடிந்தது கருணாநிதியால். இதை கருணாநிதி மறந்து விட்டார்.

நான் சொத்துக் கணக்கைக் காட்டத் தயார். கருணாநிதியும் தயாரா.? அவரது ஊழல் குறித்து விசாரிக்கத்தான்கமிஷன் அமைக்கப்பட்டது. இதிலிருந்தே யார் ஊழல்வாதிகள், யார் ஊழல் செய்யும் அரசியல்வாதி என்பதுதெரியும்.

புதிய கட்சித் தலைவர், புதிய கட்சி என்றெல்லாம் என்னைப் பார்த்து கிண்டலடிக்கிறார். வார்த்தை ஜாலமாகபேசுவதில் அவருக்கு நிகர் அவர்தான்.நாங்கள் புதியவர்கள்தான், புதிய கட்சிதான், ஆனால் எங்களிடம் புதியகொள்கையும், சிந்தனையும் இருக்கிறது.

இதுவரை அம்மாவையும், அய்யாவையும் நம்பி வாக்களித்திருக்கிறீர்கள். இந்த முறை அண்ணனுக்குவாக்களியுங்கள்.

கடந்த முறை நடந்த மாநகராட்சி தேர்தலில் ரவுடிகளையும், போலீசாரையும்வைத்துக் கொண்டு அனைத்து வார்டுகளிலும் அராஜக முறையில் ஆளும்கட்சியினர் வெற்றி பெற்றனர். இவர்களின் வெற்றி பற்றி நீதிபதி கேட்டதற்கு நூறுபேரை பதவி விலகச் செய்தனர். கவுன்சிலர்களை மட்டும் பதவி விலகினால் எப்படி,அராஜகத்தை தூண்டிய முதல்வர், உள்ளாட்சி அமைச்சர் ஸ்டாலின் ஏன் பதவிவிலகவில்லை.

அதற்கு உதவிய போலீஸ் அதிகாரிகள் ஏன் பதவி விலகவில்லை. தற்போதுநடக்கும் தேர்தலிலும் 35 பேர் ஜெயித்து விட்டோம் என்று கூறுகின்றனர். இவர்கள்எப்படி ஜெயித்தார்கள்? தேமுதிக வேட்பாளர்களின் குடும்பத்தினரை கத்திமுனையில் மிரட்டி ஜெயித்து விட்டனர்.

கூட்டணி ஆட்சி நடத்தும் திமுக மத்தியில் மட்டும் அமைச்சர் பதவியை வாங்கியது.தமிழகத்தில் மட்டும் ஏன் பிற கட்சிகளுக்கு அமைச்சர் பதவி தரவில்லை? இவர்கள்மட்டும் தான் பதவி, சுகபோகத்துடன் இருக்க வேண்டுமா?.

18ம் தேதி மறு தேர்தலாவது அமைதியாக நடக்குமா?. தேர்தல் அமைதியாகநடந்தாலும், ஓட்டு பெட்டிகள் எங்கள் பாதுகாப்பில் தான் இருக்கும். ஓட்டுஎண்ணும் நாட்களுக்குள் அந்த பெட்டியை மாற்றும் பலம் எங்களிடம் உள்ளதுஎன்று மார்தட்டி பேசிக் கொள்கின்றனர். திமுகவுடன் கூட்டணி வைக்கவில்லைஎன்பதால் என்னென்ன தொந்தரவு கொடுத்து வருகின்றனர் என்று உங்களுக்குஎல்லாம் தெரியும்.

தற்போது என்னை சிறையில் போட திட்டமிட்டுள்ளனர். அதற்காக நான்பயப்படவில்லை. அவர்களிடம் இருப்பவர்கள் அடியாட்கள் தான். ஆனால்,என்னிடம் இருப்பவர்களிடம் வெறும் கையை மட்டும் காட்டினால் போதும்,அவர்களின் கதையே முடிந்து விடும். அப்படிப்பட்ட கூட்டம் தான் என்னிடம்உள்ளது. ஆனால், அத்தகைய வழியில் செல்லும் கீழ்த்தரமான அரசியல் செய்யநான் விரும்பவில்லை.

சென்னை நகரில் எங்கு பார்த்தாலும் எம் சர்வீஸ் என்ற பெய>ல் பஸ்களைப்பார்க்கலாம். இவை அனைத்துமே சாதாரணமாகத்தான் முதலில் ஓடிக்கொண்டிருந்தன.

ஆனால் இவர்கள் (திமுக) ஆட்சிக்கு வந்ததும் எம் சர்வீஸ் என்ற பெயரில் பஸ்கட்டணத்தை மறைமுகமாக உயர்த்தி மக்களை சுரண்டுகிறார்கள். ஆட்சிக்குவந்தபோது பஸ் கட்டணத்தை உயர்த்த மாட்டோம் என்றார்கள்.

சாதாரண பஸ்சில் குறைந்தபட்சக் கட்டணம் 2 ரூபாய்தான். ஆனால் இந்த எம்.சர்வீஸ் பஸ்களில் மட்டும் குறைந்த பட்ச கட்டணமே 3 ரூபாய். ஒரு வழித்தடத்தில்10 பஸ்கள் ஓடுகிறது என்றால், ஒரு பஸ்தான் சாதாரண பஸ்ஸாக இருக்கிறது. மற்ற9 பஸ்களுமே எம் சர்வீஸ் பஸ்களாகத் தான் உள்ளன.

கிட்டத்தட்ட நகரம் முழுவதுமே எம் சர்வீஸ் பஸ்கள்தான் அதிகம் ஓடுகின்றன.இந்தப் பேருந்துகளில் எந்த விசேஷமும் இல்லை. வழக்கமான சாதாரணபேருந்துகள் நிற்கும் இடங்களில் எல்லாம் இந்த பேருந்துகளும் நின்று செல்கின்றன.

பஸ் கட்டணத்தை ஏற்ற மாட்டோம் என்று கூறி விட்டு இப்போது எம் சர்வீஸ் என்றபெயரில் மறைமுகமாக கூடுதல் கட்டணத்தை வசூலிக்கிறார்கள். சரிபஸ்களையாவது பராமரிக்கிறார்களா?. அதுவும் இல்லை. ஒரு பஸ்சை கூட்டினாலேபத்து கிலோ குப்பையை அள்ளலாம்.

இத்தேர்தலில் மக்கள் தீபம் சின்னத்தில் வாக்களித்து, தேமுதிக வேட்பாளர்களைவெற்றி பெற செய்ய வேண்டும் என்றார் விஜயகாந்த்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+