பஸ் எரிப்பு: 3 அதிமுகவினருக்கு தூக்கு-25 பேருக்கு 7 ஆண்டு சிறை
சேலம்:தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் கொலைக் குற்றவாளிகள் என நேற்று தீர்ப்பளிக்கப்பட்ட அதிமுகவைச் சேர்ந்தநெடு என்கிற நெடுஞ்செழியன், முனியப்பன், மாது என்கிற ரவீந்திரன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனைவிதிக்கப்பட்டுள்ளது.
![]() |
25 பிற குற்றவாளிகளுக்கு தலா 7 ஆண்டு, 3 மாத சிறை தண்டனையும் மற்றும் தலா ரூ. 13,000 அபராதமும்விதித்தார் நீதிபதி கிருஷ்ணராஜா. கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டலுக்கு விதியை மீறி சலுகை அளித்த ஜெயலலிதாவுக்கு சென்னைதனி நீதிமன்றம் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து 2000மாவது ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி தீர்ப்பளித்தது.இதையடுத்து மாநிலம் முழுவதும் அதிமுகவினர் அராஜகத்தில் இறங்கினர்.
கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவிகள் தர்மபுரிக்கு வந்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்தபோது இலக்கியம்பட்டி என்ற இடத்தில் அதிமுகவினர் அவர்களது கல்லூரி பஸ்ஸை வழிமறித்தனர்.
உள்ளே மாணவ, மாணவிகள், ஆசிரியைகள் இருப்பதைக் கூட கண்டு கொள்ளாமல் அந்த பஸ் மீதுபெட்ரோலை ஊற்றி அந்தக் கும்பல் தீ வைத்தது. இதில் கோகிலவாணி (19), ஹேமலதா (19), காயத்ரி (19)ஆகிய மாணவிகள் பஸ்சுக்குள்ளேயே எரிந்து சாம்பலாயினர். மேலும் 18 மாணவிகள் பலத்த காயமடைந்தனர்.
இந்த தீ வைப்பு தொடர்பாக அப்போதைய தர்மபுரி ஒன்றிய அதிமுக செயலாளர் ராஜேந்திரன், நகர இணைச்செயலாளர் நெடு என்ற நெடுஞ்செழியன், எம்ஜிஆர் இளைஞர் அணி துணைத் தலைவர் மாது என்ற ரவீந்திரன்(இந்த மூவரும் தான் பஸ் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தவர்கள்)
ஊராட்சி மன்றத் தலைவர் முனியப்பன், அதிமுக நிர்வாகிகளான முருகேசன், வேலாயுதம், முத்து என்றஅறிவழகன், தவுலத் பாஷா, ரவி, முருகன், விபி முருக், சம்பத், நஞ்சன் என்ற நஞ்சப்பன், வடிவேல்,
![]() |
மணி என்ற கூடலர் மணி, மாது, பழனிச்சாமி, ராஜு, அரசு போக்குவரத்துக் கழக கண்டக்டரும் அதிமுகதொண்டருமான ராமன், சந்திரன், செல்லகுட்டி, காவேரி, மணி, மாதையன், செல்வம், மாதேஸ், மாணிக்கம்,உதய குமார், செல்வராஜ், சண்முகம் ஆகிய 31 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் செல்லக்குட்டிவிபத்தில் சிக்கி இறந்துவிட்டார்.
அதிமுக அரசால் ஏகப்பட்ட இழுத்தடிப்புகள் செய்யப்பட்டதால் சம்பவம் நடந்து ஏழு ஆண்டுகள் கடந்துவிட்டநிலையில் நேற்று தான் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. சேலம் முதலாவது அமர்வு நீதிபதிகிருஷ்ணராஜா வழங்கிய தீர்ப்பில், 28 அதிமுகவினரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார்.
இவர்களுக்கான தண்டனை இன்று அறிவிக்கப்பட்டது.
![]() |
அதன்படி நெடு என்கிற நெடுஞ்செழியன், முனியப்பன், மாது என்கிற ரவீந்திரன் ஆகியோருக்கு தூக்குத்தண்டனை விதித்தார் நீதிபதி கிருஷ்ணராஜா.
இந்த மூவரும் தான் பஸ் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தவர்கள். மேலும் உள்ளே இருந்து மாணவ,மாணவர்கள் தப்ப முயன்றபோது கதவை பூட்டினர். இதனால் ஜன்னல் வழியாகவே மாணவ, மாணவிகளும்ஆசிரியைகளும் வெளியே குதிக்க முடிந்தது. ஆனால், கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி ஆகியோர்தப்புவதற்குள் பஸ் முழுவதுமாக எரிந்து சாம்பலாகிவிட்டது.
நீதிபதி தனது தீர்ப்பில் கூறியதாவது:
பஸ்ஸை எரித்த நெடு என்கிற நெடுஞ்செழியன், முனியப்பன், மாது என்கிற ரவீந்திரன் ஆகியோருக்குஅதிகபட்ச தண்டனையாக தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும் பஸ்சில் இருந்த 45 பேரை கொல்லமுயன்ற இவர்களுக்கு 307வது பிரிவின்படி 7 ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 46,000 அபராதமும்விதிக்கப்படுகிறது.
![]() |
சொத்துக்களை சேதப்படுத்துதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதால்மேலும் 7 ஆண்டு 3 மாத சிறை தண்டனையும், ரூ. 13,000 அபராதமும் விதிக்கப்படுகிறது.
25 பிற குற்றவாளிகள் மீதும் பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல், சாலை மறியல், பஸ் கண்ணாடிகளைஉடைத்தல், வாகன-மனித நடமாட்டத்தை தடுத்தல், சட்ட விரோதமாகக் கும்பலாக கூடுதல், உயிர்ச் சேதம்விளைவுக்கும் எண்ணத்துடன் சட்டவிரோதமாகக் கூடி கலகம் செய்தல் உள்பட 7 பிரிவுகளின் கீழ்குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. எனவே இவர்களுக்கு தலா 7 ஆண்டு, 3 மாத சிறை தண்டனையும்மற்றும் தலா ரூ. 13,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
இதில் மணி என்ற மெம்பர் மணி பயங்கர ஆயுதங்களால் பஸ்ஸை உடைத்துள்ளார். அவருக்கு கூடுதலாக 6மாதம் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி கிருஷ்ணராஜா தீர்ப்பளித்தார்.
![]() |
நீதிபதி இவ்வாறு தீர்ப்பளித்துக் கொண்டிருந்தபோதே தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் ஓலமிட்டு கத்த ஆரம்பித்தனர்.இதையடுத்து அந்த மூவரையும் உடனடியாக நீதிமன்றத்தில் இருந்து வெளியே கொண்டு வந்த போலீசார், அவர்களை கோவை மத்திய சிறைக்குக்கொண்டு சென்றனர்.
முன்னதாக குற்றவாளிகளுக்கு சாதாரண தண்டனை அளிக்குமாறு அவர்களது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் கோரிக்கைவைத்தனர். ஆனால், அதை ஏற்க மறுத்த நீதிபதி, இது மிக அரிதான வழக்கு. உயிரோடு பஸ்சில் பூட்டி வைத்து எரிக்கும் அளவுக்கு அந்த இளம்மாணவிகள் என்ன தவறு செய்தார்கள் என்று கேட்ட நீதிபதி, இது மகா பாதக செயல். அப்பாவி மாணவிகளை எரித்துக் கொலைசெய்திருக்கிறார்கள், இது மன்னிக்கக் கூடிய குற்றமா என்றார்.
அதே போல தீர்ப்பு அளிக்கப்பட்ட பின் மற்ற 25 அதிமுகவினரும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். அதை நீதிபதி உடனடியாக நிராகரித்தநீதிபதி உடனே அவர்களை சிறையில் அடைக்க போலீசாருக்கு அதிரடி உத்தரவிட்டார். இதையடுத்து அனைவரும் சேலம் சிறைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.
இது திமுகவின் சதி:
போலீசார் தண்டனை அளிக்கப்பட்ட அதிமுகவினரை சிறைக்குக் கொண்டு செல்ல வெளியே கொண்டு வந்த போது, இது திமுகவின் அரசியல் சதி.நாங்கள் நிரபராதிகள், உயர் நீதிமன்றத்தை நாடுவோம். அங்கு எங்களுக்கு நீதி கிடைக்கும் என கோஷமிட்டனர்.
இன்றைய தீர்ப்பை முன்னிட்டு சேலம் நீதிமன்ற வளாகம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். ஏ.கே.-47 துப்பாக்கி ஏந்திய போலீசாரும்பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

















Click it and Unblock the Notifications