மாணவிகளின் குடும்பத்தினர்-உறவினர்கள் கண்ணீர்!
சேலம்:3 மாணவிகளை உயிரோடு வைத்து எரித்துக் கொலை செய்த தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் 3 பேருக்கு தூக்குத்தண்டனை கொடுக்கப்பட்டதை மாணவிகளின் குடும்பத்தினரும், உறவினர்களும் வரவேற்றுள்ளனர்.
பலியான கோகிலவாணியின் தந்தை வீராசாமி கூறுகையில், தாமதமாக வந்த தீர்ப்பு என்றாலும் இறுதியில் நீதிவென்றுள்ளது. 3 பேருக்கு மட்டும் தூக்குத் தண்டனை கொடுத்தது போதாது, மற்றவர்களுக்கும் கடுமையான தண்டனைகொடுத்திருக்க வேண்டும்.
![]() |
சுற்றுலாவுக்காக போன மகளை கரிக் கட்டையாகத்தான் கண்ணில் காட்டினார்கள். வேளாண்மை அதிகாரியாக அவளை ஆக்கிப் பார்க்கஆசைப்பட்டேன். ஆனால் முடியாமல் போய் விட்டது, நடக்காமலேயே போய் விட்டது என்று கதறி அழுதார் வீராசாமி.
கிருஷ்ணகிரி கோர்ட்டில் நடந்து வரும் விசாரணை அதிமுகவினருக்கு சாதகமாக, பாரபட்சமாக நடப்பதாகக் கூறி வேறு கோர்ட்டுக்கு மாற்றவேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வீராசாமிதான் வழக்கு தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்தே இந்தவழக்கு சேலத்திற்கு மாற்றப்பட்டது. விசாரணையும் ஒழுங்காக நடந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கு இவ்வளவு தூரம் வந்ததற்கு வீராசாமியின் தைரியமும் அவர் எடுத்த உறுதியான முயற்சிகளுமே காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்த இன்னொரு மாணவி ஹேமலதாவின் தந்தை கேசவசந்திரன் கூறுகையில், இத்தகைய படு பாதகச்செயலை இனியும் யாரும் செய்யக் கூடாது. இதைப் பார்த்தாவது இனி வன்முறையில் ஈடுபடுவோர் திருந்தவேண்டும். இப்படிப்பட்டவர்களுக்கு இந்தத் தீர்ப்பு சரியான பாடமாகும் என்றார்.
![]() |
இதேபோல பலியான காயத்ரியின் உறவினர்களும் தீர்ப்பை வரவேற்றனர்.
அதே போல தண்டனை விவரத்தை அறிய சேலம் நீதிமன்ற வளாகத்தில் நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்தனர். முக்கியக் குற்றவாளிகள் 3 பேருக்கும் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டதும் அவர்கள் கை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மறுபக்கம், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரின் குடும்பத்தினரும், உறவினர்களும் கதறி அழுது சோகத்தை வெளிப்படுத்தினர். அம்மா நம்ம பக்கம்இருப்பதால் பாதகமான தீர்ப்பு எல்லாம் வராது என இவர்கள் நினைத்திருந்ததாகத் தெரிகிறது.
அம்மாவுக்காக பஸ்ஸை எரித்த வழக்கில் அவ்வளவு சீக்கிரத்தில் தூக்கு தண்டனை தந்துவிட மாட்டார்கள் என இந்தக் கொலைகாரக் கும்பலும் கூடநினைத்திருந்தது. ஆனால், அவர்களுக்கு நீதி மரண அடி தந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்














Click it and Unblock the Notifications