தூக்கு தண்டைக்காக போராடிய வக்கீல் சீனிவாசன்
சேலம்:தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில், மாணவிகளை இரக்கமில்லாமல் எரித்துக் கொன்ற 3 அதிமுகவினருக்கும் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் எனஅரசு வழக்கறிஞர் சீனிவாசன் மிகத் தீவிரமாக வாதாடினார். அவர் இந்த வழக்கை நடத்திய விதத்தால் தான் இந்த வன்முறைக் கும்பலுக்குகூண்டோடு தண்டனை கிடைத்துள்ளது.
வழக்கில் தொடர்புடைய 28 அதிமுகவினரும் குற்றவாளிகளே, அதிலும் 3 பேர் நேரடியான கொலையாளிகள் என நேற்று சேலம் நீதிமன்ற நீதிபதிகிருஷ்ணராஜா தனது தீர்ப்பை அறிவித்தார்.
![]() |
இதையடுத்து எழுந்த அரசு வழக்கறிஞர் சீனிவாசன், கொலைக் குற்றவாளிகள் என நெடுஞ்செழியன், மாது, முனியப்பன் ஆகியோர்நிரூபிக்கப்பட்டுள்ளனர். கொலைக் குற்றவாளிகளுக்கு பொதுவாக ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.
அரிதான சம்பவங்களில் தூக்குத் தண்டனை விதிக்கப்படும். இந்த வழக்கும் அரிதான வழக்குதான். எனவே இந்த 3 குற்றவாளிகளுக்கும் தூக்குத்தண்டனை விதிக்க வேண்டும். அவர்கள் வெளியே வந்தால் சமுதாயத்தில் மக்களால் நிம்மதியாக வாழ முடியாது.
மாணவிகள் சுற்றுலா சென்று விட்டுத் திரும்பியபோது 2வது எதிரியும், 3வது எதிரியும் பஸ்சுக்குத் தீ வைக்கச் சென்றபோது, பேராசிரியைகள்அகிலா, லதா, டிரைவர் கந்தசாமி ஆகியோர் பஸ்சில் மாணவிகள் இருக்கிறார்கள், அவர்களை ஒன்றும் செய்து விடாதீர்கள் என காலில் விழாதகுறையாக கெஞ்சினார்கள்.
ஆனால் அதைப் பொருட்படுத்தாத 3வது எதிரி மாது என்கிற ரவீந்திரன், எல்லோரையும் சேர்த்து தீவைத்துக் கொளுத்தச் சொன்னார். 2வது எதிரிநெடு என்கிற நெடுஞ்செழியன் பஸ் மீது பெட்ரோலை ஊற்றி (இதற்காக டிவிஎஸ் 50ல் பெட்ரோல் கேன் எடுத்து வந்தவர் இவர்) ஊற்றி தீவைத்தார்.
இதற்கு 4வது எதிரி முனிப்பன் உடந்தை. எனவே இந்த மூன்று பேருக்கும் தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்று வாதிட்டார் சீனிவாசன்.
சீனிவாசன் சந்தித்த சவால்கள்:
இந்த வழக்கில் 31 அதிமுகவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் ஒருவரான செல்லக்குட்டி இறந்துவிட்டார்.
![]() |
ஆனால், இந்த வழக்கை முதல்வராக ஜெயலலிதா இருந்ததால் அதிமுகவினர் மீதான இந்த வழக்கை தலைமையின் உத்தரவுப்படி போலீசார் மிகஅலட்சியமாக நடத்தினர். விசாரணையை சிபிசிஐடி போலீசார் நடத்தினாலும் அதிமுகவினரை தப்ப வைக்க அரசும், போலீசாரும், அரசு வக்கீலும்முயன்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மிக தெனாவட்டாக நீதிமன்றத்தில் நடந்து கொண்டனர்.
மேலும் போலீஸ் மற்றும் அதிமுகவினரின் மிரட்டலால் 20 சாட்சிகள் பல்டி அடித்தனர். (மொத்த சாட்சிகள் 22 பேர்). இதனால் இந்தக் கும்பல்மொத்தமாக வழக்கில் இருந்து தப்பிவிடும் சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து இறந்த மாணவி கோகிலவாணியின் தந்தை வீராசாமி, வழக்கை கோவைக்கு மாற்றக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். அதைவிசாரித்த நீதிபதி கனகராஜ் தமிழக அரசுக்கும் போலீசாருக்கும் கடும் கண்டனம் தெரிவித்தார். அரசு கண் துடைப்பு நாடகத்தை அரங்கேற்றிக்கொண்டிருக்கிறது என்று சாடிய நீதிபதி வழக்கை கிருஷ்ணகிரியில் இருந்து சேலத்துக்கு மாற்றினார்.
மேலும் அரசு வக்கீலையும் மாற்ற உத்தரவிட்டார். ஆனால், நீதிமன்றம் நியமித்த புதிய வழக்கறிஞரான சீனிவாசனுக்கு போதிய ஆவணங்களைத்தராமல் இழுத்தடித்தனர். மேலும் அவருக்கும் கூட மிரட்டல்கள் வந்தன. இதனால் வழக்கு விசாரணை நீண்டு கொண்டே போனது.
ஆனாலும் சேர்ந்து போகாமல் வழக்கை நடத்தினால் சீனிவாசன். மிக வேகமாகவும், தீவிரமாகவும் செயல்பட்டு 123 சாட்சியங்களை நீதிமன்றத்தில்கொண்டு வந்து நிறுத்தச் செய்தார்.
அதில் தர்மபுரி கலெக்டர், கோவை விவசாயக் கல்லூரி துணை வேந்தர் ஆகியோரும் அடக்கம். இந்த வழக்கில் பஸ்சில் சென்ற ஆசிரியைகள்,மாணவிகள் அளித்த சாட்சியம் தான் மிகவும் உதவிகரமாக இருந்தது. அதிமுகவினரின் மிரட்டல்களையும் மீறி எரிக்கப்பட்டபோது பஸ்சில்இருந்த மாணவிகளும் ஆசிரியைகளும் சாட்சியம் அளித்தனர்.
அப்போது அந்த சம்பவத்தை நினைவு கூர்ந்து அவர்கள் அழுத அழுகையும், மயங்கி விழுந்ததும் நீதிமன்றத்தில் இருந்தவர்களை எல்லாம் கண்கலங்கச் செய்தது. ஆனால், அதிமுக மட்டும் கலங்கவே இல்லை. இந்த 31 பேர் கும்பலை காப்பாற்றுவதில் தான் தீவிரமாக இருந்தது. இதற்குபோலீசாரும் உடந்தையாக இருந்தனர்.
ஆனால், நீதிமன்றத்தின் உதவியோடு தடைகளை எல்லாம் உடைத்து எறிந்து நீதி வெல்ல உதவியிருக்கிறார் வழக்கறிஞர் சீனிவாசன்.
மிக பொருத்தமான தீர்ப்பு: சீனிவாசன்
முக்கியக் குற்றவாளிகள் 3 பேருக்கும் தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்று நான் வாதாடினேன். அதை நீதிபதி ஏற்று தீர்ப்பு வழங்கியுள்ளது மகிழ்ச்சிதருகிறது. இது மிகப் பொருத்தமான, சரியான தீர்ப்பு.
இனிமேலாவது இதுபோன்ற கொடூர செயலில் யாரும் ஈடுபடக் கூடாது. அப்படிப்பட்ட நினைப்பு உள்ளவர்களுக்கு இந்தத் தீர்ப்பு சரியான பாடமாகும் என்றார்சீனிவாசன்.














Click it and Unblock the Notifications