இலங்கை-ராஜபக்ஷே மீது சமரவீரா சரமாரி புகார்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:விடுதலைப் புலிகள் முன்பை விட பல மடங்கு பலத்துடன் இப்போது உள்ளனர். ராஜபக்ஷே அரசின் தவறான கொள்கைகளாலும், இலங்கையில்அதிகரித்து வரும் மனித உரிமை மீறல்களாலும், உலக அரங்கில் இலங்கை தனிமைப்படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது என்று ராஜபக்ஷேவால்டிஸ்மிஸ் செய்யப்பட்ட முன்னாள் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரா கூறியுள்ளார்.

வெளியுறவுத் துறை பொறுப்பிலிருந்து முதலில் மாற்றப்பட்ட சமரவீரா பின்னர் அமைச்சர் பதவியிலிருந்தும் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். அதன்பின்னர் முதல் முறையாக நேற்று செய்தியாளர்களை சந்தித்தார் சமரவீரா. அப்போது ராஜபக்ஷே அரசை கடுமையாக விமர்சித்தார் அவர்.

சமரவீரா கூறுகையில், உலக அரங்கில் இலங்கை தற்போது தனித்து ஒதுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அரசின் தவறான கொள்கைகளும்,அதிகரித்து வரும் மனித உ>மை மீறல்களுமே இதற்கு முக்கியக் காரணம்.

இதற்கு முன்பு இப்படிப்பட்ட மோசமான நிலை இலங்கைக்கு வந்ததில்லை. அதிபர் ராஜபக்ஷேவுக்கு சர்வதேச அரங்கில் இலங்கையை எப்படிகொண்டு செல்ல வேண்டும் என்பது தெரியவில்லை.

அதிபரும் அவரது இரு சகோதரர்களும் அழிவுப் பாதைக்கு நாட்டை அழைத்துச் சென்று கொண்டுள்ளனர்.

விடுதலைப் புலிகள் மேலும் மேலும் பலமடைந்து வருகின்றனர். அரசின் போக்கே இதற்குக் காரணம். முன்பை விட விடுதலைப் புலிகள் தற்போதுபெரும் வலுவுடன் உள்ளனர்.

இப்போது போர் வன்னியில் நடக்கவில்லை. இதை அரசும், விடுதலைப் புலிகளும் நன்கு அறிவர். சர்வசே அரங்கில்தான் உண்மையான போர்நடந்து வருகிறது.

இலங்கையில் தொடர்ந்து மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருகின்றன. இலங்கை அரசின் தொடரும் மனித உரிமை மீறல்கள் காரணமாகவிடுதலைப் புலிகளுக்கு சர்வதேச அளவில் நல்ல பெயர் கிடைத்து வருகிறது.

உலகிலேயே மிகவும் பழமையான ஜனநாயக நாடு என்ற சிறப்பு கொண்ட இலங்கை இப்போது ராஜபக்ஷேவின் கையில் சிக்கி சர்வாதிகாரநாடாக, அதிலும் மோசமான சர்வாதிகார நாடாக மாறி வருகிறது. இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டியது அவசியம்.

அழிவுப் பாதையிலிருந்து உடனடியாக ஜனநாயகப் பாதைக்குத் திரும்புமாறு கோரி அதிபருக்கு நான் பத்து பக்க கடிதம் எழுதியுள்ளேன். அவர்உடனடியாக தனது சர்வாதிகாரப் போக்கை கைவிட வேண்டும்.

பதவியிலிருந்து நீக்கப்பட்ட எனக்கும், இன்னொரு அமைச்சரான ஸ்ரீபதி சூரியராச்சியின் உயிருக்கும் ஆபத்து உள்ளது. எங்களுக்கு உயர்மட்டபாதுகாப்பு அளிக்க அதிபர் உத்தரவிட வேண்டும். எங்களுக்கு வடக்கில் உள்ள பிரபாகரன் (விடுதலைப் புலிகளின் தலைவர்) மட்டுமல்லாது,தெற்கில் உள்ள ஏராளமான பிரபாகரன்களாலும் ஆபத்து அதிகம் உள்ளது என்றார் சமரவீரா.

அதிபர் ராஜபக்ஷேவின் இரு சகோதரர்களும் முக்கிய அரசுப் பொறுப்புகளில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சகோதரான கோதபயாராஜபக்ஷே, பாதுகாப்புத்துறை செயலாளராக உள்ளார். இன்னொரு சகோதரரான பாசில் ராஜபக்ஷே, அதிபரின் ஆலோசகராக உள்ளார்.

விமானப் படை கடும் தாக்குதல்:

இந் நிலையில் யாழ்ப்பாணத்தின் வட பகுதியில் விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது இலங்கை விமானப்படை கடும் தாக்குதலில் இறங்கியுள்ளது. அதேசமயம், அப்பாவித் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளிலும்சரமாரியான தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இலங்கை பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், யாழ்ப்பாணத்தின் வடக்கில் பலாய் பகுதியைச் சுற்றிலும் உள்ள விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது விமானப்படை தாக்குதல்நடத்தி வருகிறது.

கஃபிர் ஜெட் விமானங்கள் மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்படுகிறது. சொர்ணபட்டு, பலாய் பகுதியில் இன்று காலை 9.50 மணிக்கு தாக்குதல் தொடங்கியது. இந்தத் தாக்குதலில் புலிகளின் பலநிலைகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.

இதேபோல செம்மலை என்ற இடத்தில் கடற்புலிகளின் தளம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் இலங்கைவிமானப்படை குறி வைத்துத் தாக்குதல் நடத்தி வருவதாக விடுதலைப் புலிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக புலிகள் இயக்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இன்று காலை முதல் அப்பாவி மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் இலங்கை விமானப்படை வெறித் தாக்குதல் நடத்தி வருகிறது.

காலை 9.45 மணி முதல் 10.15 மணி வரை இலங்கை விமானப் படை விமானங்கள், இரண்டு மிக் ரக விமானங்கள் மூலம் கிலாலி, நாகர்கோவில், பலாய் பகுதிகளில் மக்கள் குடியிருப்புகள் மீதுஇலங்கை படைகள் சரமாரியாக தாக்குதல் நடத்தின.

இந்த்த தாக்குதலால் இப்பகுதியில் வசித்த வந்த அப்பாவி மக்கள் கிளிநொச்சி மற்றும் முல்லைத் தீவுக்கு இடம் பெயர்ந்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

மீண்டும் அகதிகள் வருகை அதிகரிப்பு:

இந் நிலையில் இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு வரும் அகதிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இலங்கையில் தமிழர் பகுதிகளில் மீண்டும் ராணுவம் தீவிரத் தாக்குதலை நடத்தி வருகிறது. தமிழர்களை விரட்டி விட்டு விட்டு அப்பகுதிகளை பிடிக்க ஆரம்பித்துள்ளது.

இதனால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் இலங்கைக்குள்ளேயே பல்வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். மேலும் பலர் தமிழகத்திற்கு அகதிகளாக தப்பி வர ஆரம்பித்துள்ளனர்.

சமீப காலமாக குறைந்திருந்த அகதிகள் வருகை தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று இலங்கையிலிருந்து தனுஷ்கோடிக்கு 8 பெண்கள் உள்பட 22 தமிழர்கள் வந்தனர்.திரிகோணமலை, வவுனியாவைச் சர்ந்த 5 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அவர்கள்.

ஒவ்வொருவரும் தலா ரூ. 4000 பணம் கொடுத்து தனுஷ்கோடிக்கு தப்பி வந்துள்ளனர். பின்னர் அனைவரும் மண்டபம் அகதிகள் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+