கூடங்குளம்: நாடு தழுவிய போராட்டம்-மேதா
கூடங்குளம் (நெல்லை):கூடங்குளத்தில் அணு மின் நிலையம் அமைக்கப்படுவதை எதிர்த்த நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என மக்கள் இயக்கங்களின்தேசிய கூட்டமைப்புத் தலைவர் மேதா பட்கர் கூறியுள்ளார்.
நெல்லை மாவட்டம் கூடங்குளதில் ரஷிய நாட்டின் உதவியுடன் அணு மின் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதை எதிர்த்து மேதா பட்கர்தலைமையில் கூடங்குளத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
![]() |
இந் நிலையில் மேதா பட்கர் கூறுகையில், அணு மின் நிலையங்கள் நமது நாட்டுக்கு உகந்தவையல்ல, ஆபத்தானவை. இங்கு அமைக்கப்பட்டுவரும் அணு மின் நிலையங்கள் மக்களின் வாழ்வு>மைக்கு வேட்டு வைப்பதாக அமைந்துள்ளது.
குஜராத் மாநிலம் கக்ரடார், மும்பை அருகே தாராப்பூர், ராஜஸ்தான் மாநிலம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் அணு மின் நிலையங்களால்அப்பகுதிகளில் அணுக் கதிர் வீச்ச ஏற்பட்டு மக்களுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இதேபோல, ஜார்க்கண்ட மாநிலத்தில் சுடுகுடா என்ற இடத்தில் யுரேனியம் வெட்டி எடுக்கப்படுகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள மக்களுக்குபல்வேறு நோய்கள் உருவாகின்றன.
குறைப் பிரசவம் அதிகரிக்கிறது. புற்றுநோய், மூளை வளர்ச்சியின்மை ஆகியவை அதிகரிக்கின்றன.
அணு மின் நிலையங்களால் மீனவர்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். மீன் வளம் குறையும். கூடங்குளத்தில் அணு உலைகள் அமைப்பதுதொடர்பாக வெளியிட்ட சுற்றுச்சூழல் தாக்கீது அறிக்கையை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.
அணு மின்நிலையம் அமைப்பதை எதிர்த்து நாடு தழுவிய அளவில் ஆக்ஷன் 2007 என்ற பெயரில் போராட்டம் நடத்துவோம் என்றார் மேதா.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!













Click it and Unblock the Notifications