நகைக் கடை அதிபர் விஷம் கொடுத்து கொலை:காளி கோவில் பூசாரி மகன், 2 பேர் கைது
சென்னை:சென்னையைச் சேர்ந்த பிரபல நகைக் கடை அதிபர் சுரேஷ் போரா விஷம் வைத்துக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக கோவில் பூசாரி உள்பட 4பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை பெரம்பூர் கோபால செட்டி நகரைச் சேர்ந்தவர் சாந்திலால். இவரது மகன் சுரேஷ் போரா (வயது 42). பெரம்பூரில் மிட்டாலால் ஜூவல்லரிஎன்ற நகைக் கடையை நடத்தி வந்தார்.
கோடீஸ்வரரான போராவுக்கு அண்ணா சாலையில் ஜவுளிக் கடையும் உள்ளது. இவரது குடும்பத்தினர் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாகசென்னையில் பலவேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுரேஷ் போராவுக்கு மஞ்சுளா என்ற மனைவியும், பிரியங்கா என்ற மகள், அஜீஸ் என்ற மகனும் உள்ளனர். போரா மேல்மருவத்தூர் ஆதி பராசக்திகோவிலுக்கு அடிக்கடி செல்வது வழக்கம். அப்படிப் போகும்போது வழியில் மாமண்டூ>ல் உள்ள காளி கோவிலுக்கும் செல்வார்.
சென்னையைச் சுற்றிலும் உள்ள புறநகர்ப் பகுதிகளில் பல நிலங்களை வாங்கிப் போட்டுள்ளாராம் போரா. இதுபோன்ற காரியங்களில்ஈடுபடுவதற்கு முன் காளி கோவிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்படிப் போகும்போது கோவில் பூசாரி பரமேஸ்வரனின் மகன்சம்பத்துக்கும், போராவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் தனது மகள் பிரியங்காவுக்கு கல்யாணம் செய்வதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டார் போரா. மும்பையில் மாப்பிள்ளைபார்க்கப்பட்டிருந்தது. வழக்கம் போல இந்த நல்ல காரியத்தையொட்டி புதன்கிழமை காளி கோவிலுக்குச் சென்றார் போரா. ஆனால் அவர் வீடுதிரும்பவில்லை.
இதையடுத்து அவரது உறவினர்கள் செங்கல்பட்டு போலீஸில் புகார் கொடுத்தனர். போரா கடத்தப்பட்டிருக்கக் கூடும் என போலீஸார்சந்தேகமடைந்தனர்.
இந் சூழ்நிலையில் இன்று அதிகாலை சென்னை கிஙும்ஸ் சாலையில் ஒரு கார் தனியாக நின்று கொண்டிருந்தது. காரின் பின் இருக்கையில் போராபிணமாகக் கிடந்தார். தகவல் அறிந்ததும் வட சென்னை போலீஸஸ் இணை ஆணையர் ரவி உள்ளிட்டோர் அங்கு விரைந்தனர்.
போராவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனையில் அவர் விஷம் அருந்தி இறந்தது தெரிய வந்தது.குளிர்பானத்தில் விஷத்தைக் கலந்து அவருக்குக் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து காளி கோவிலுக்கு போலீஸ் படை விரைந்தது. அங்கு போராவுடன் யார் வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தினர். இதில்,பணத்துக்காக போரா கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
தி.நகரில் ஒரு நிலத்தை வாங்க போரா திட்டமிட்டிருந்தார். மாமண்டூர் கோவிலுக்கு புதன்கிழமை போனபோது கையோடு நிலம் வாங்குவதற்கானபணம் ரூ. 3 கோடியையும் எடுத்துச் சென்றுள்ளார்.
அவரிடம் பணம் இருப்பதை அறிந்த பூசாரியின் மகன் சம்பத் திட்டமிட்டார். அவரது நண்பர்கள் இரண்டு பேரும் இதற்கு ஒத்துழைத்தனர்.இதையடுத்து போராவுடன் அவர்கள் சென்னைக்கு அதே காரில் வந்துள்ளனர்.
வழியில் போராவைக் கொன்று விட்டு அவர் வைத்திருந்த 2 கோடி பணத்தை எடுத்துக் கொண்டு தப்பியுள்ளனர். காரின் பின் பகுதியில் 1 கோடிபணத்தை வைத்திருந்தார் போரா. ஆனால் அது அவர்களுக்குத் தெரயாததால் அந்தப் பணம் மட்டும் தப்பியது.
சம்பத் அவரது நண்பர்கள் கவுதம், மேத்தா ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ஒரு காரும் பறிமுதல்செய்யப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications