கலர் டிவி விளம்பரம்-ஆணையத்தில் தேமுதிக புகார்
சென்னை:சென்னை மாநகராட்சிக்கு மறு தேர்தல் நடக்கவுள்ள நிலையில் தமிழக அரசின் இலவச கலர் டிவி தொடர்பான விளம்பரம் வாக்காளர்களைஈர்க்கும் வகையில் உள்ளதால் அதைத் தடை செய்ய வேண்டும் என்று கோரி மாநில தேர்தல் ஆணையத்தில் தேமுதிக புகார் செய்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி மறு தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி தேர்தல் ஆணையர் சந்திரசேகரனுக்குஅனுப்பியுள்ள புகார் கடிதத்தில்,
மாநகராட்சி மறு தேர்தலில் 31வது வட்ட வேட்பாளராக தேமுதிக சார்பில் நான் போட்டியிடுகிறேன்.
எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இந்த நிலையில் கடந்த 14ம் தேதி வெளிவந்த மாலைப் பத்திரிக்கைகளிலும், 15ம் தேதி காலைபத்திரிக்கைகளிலும் இலவச வண்ணத் தொலைக்காட்சி குறித்த முழுப்பக்க விளம்பரம் அரசு சார்பாக வெளியிடப்பட்டுள்ளது.
இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கும் விழா சென்னை மாநகராட்சியின் எல்லை அருகே (வில்லிவாக்கத்தில்) நடைபெறுவதாலும்,இந்தத் திட்டம் தொடரும் என்றும் மிகப் பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
இது எனது வார்டில் உள்ள வாக்காளர்களின் மன உறுதியைச் சிதறடித்து சபலத்துக்கு உள்ளாக்கி ஆளும் திமுக கூட்டணிக்கு ஆதரவாகவாக்களிக்கும் வண்ணம், திசை திருப்பும் வகையில் உள்ளது.
தேர்தல் நடைமுறை விதிகளுக்குப் புறம்பாக செயல்படுத்தப்படும் தமிழக அரசின் இச்செயலால் எனக்கும் எங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவேட்பாளர்களுக்கும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் வகையில், இந்த விளம்பரம் உள்ளது.
தேர்தல் விதிமுறைகளை மீறியுள்ள முதல்வர் கருணாநிதி, உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின், தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள்தொடர்புத் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications