அதிமுகவினரின் மிரட்டலும், பண பேரமும்
சேலம்:தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் இருந்து தப்ப பலியான மாணவிகளின் பெற்றோரை அதிமுகவினர் மிரட்டி பணிய வைக்க முயன்றுள்ளனர். அதுமுடியாமல் போகவே பண பேரம் பேசியுள்ளனர்.
வீராசாமியிடம் விலை பேசிய பாதகர்கள்:
தீர்ப்பை கேட்க சேலம் நீதிமன்றத்துக்கு வந்திருந்த கோகிலவாணியின் தந்தை வீராசாமி கூறுகையில்,
இது போன்ற ஒரு சம்பவம் இனிமேல் நடக்கவே கூடாதுப்பா (உடைந்து அழுகிறார்). அதற்காகத் தான் நான் உயர் நீதிமன்றம் வரை சென்றேன்.ஆனால், வழக்கை அப்படியே விட்டுவிடும்படி என்னை அதிமுகவினர் மிரட்டினார்கள்.
அது முடியாமல் போகவே என்னிடம் விலை பேசினார்கள். இது விலை கொடுத்து முடிகிற பிரச்சனையா (கொதிப்புடன் பேசுகிறார்). அதிமுகவினர்அனுப்பிய கோடீஸ்வரர்கள் எல்லாம் என் வீட்டுக்கு வந்து என்ன வேண்டும் என்று கேட்டார்கள்.
என் மகள் சாவுக்கு நியாயம் வேண்டும், வெளியே போ என்று என்று அவர்களை எச்சரித்து அனுப்பினேன் என்றார்.
வீராசாமியால் தான் வழக்கு இவ்வளவு தூரம் முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
ஹேமலதாவின் தந்தை கண்ணீர்:
பலியான இன்னொரு மாணவியான ஹேமலதாவின் தந்தை கேசவ சந்திரன் சென்னை இந்தியன் வங்கி கிளையொன்றில் துணை மேலாளராகஉள்ளார். தீர்ப்பை கேட்க நீதிமன்றத்துக்கு வந்திருந்த இவர் பாதி நேரம் அழுதபடியே தான் இருந்தார்.
அவர் கூறுகையில், எனக்கு 5 குழந்தைகள். 3வது பெண் தான் ஹேமலதா (சொல்லும்போதே அழுகிறார்). இந்த வழக்குக்கு எத்தனை பிரச்சனைகள்,கடவுளே. ஆனால் இந்த வழக்கு முடிவுக்கு வர முக்கிய காரணம் உயர் நீதிமன்ற நீதிபதி கனராஜ் தான். அவருக்கு எப்படி நன்றி சொல்வது என்றுதெரியவில்லை என்றார்.
காயத்ரியின் தந்தை வெங்கடேசன் பேட்டி:
அதே போல இன்னொரு மாணவியான காயத்ரியின் தந்தை வெங்கடேசன், தாயார் கெளஞ்சயம்மாள். வெங்கடேசன் விருத்தாசலம் கல்லூரியில்முதல்வராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
தீர்ப்பு வெளியான செய்தியை தொலைக்காட்சியில் பார்த்த இந்தத் தம்பதி கண்ணீரை நிறுத்த நெடு நேரம் ஆனது. பின்னர் வெங்கடேசன்கூறுகையில்,
எங்கள் மகளுக்கு ஏற்பட்ட கதி யாருக்கும் வரக் கூடாது சாமி. நீதிபதி கிருஷ்ணராஜா உருவத்தில் கிருஷ்ணபரமாத்வே வந்து தீர்ப்புகொடுத்துவிட்டதாகவே கருதுகிறோம்.
இந்த வழக்கை முடக்க பணமும், படை பலமும், அரசியல் பலமும் இறக்கிவிடப்பட்டன. சாட்சிகளை மிரட்டினார்கள், அவர்களை பிறழவைத்தார்கள். இதைப் பார்த்த நாங்கள், இந்த வழக்கில் நீதி கிடைக்காது என்றே நினைத்தோம். ஆனால் தீர்ப்பின மூலம் நீதியும் ஆண்டவனும்இருப்பது உண்மை என்று உறுதியாகிவிட்டது.
என் பொண்ணு துடிதுடித்து இறந்தது மாதிரி இந்த பாவிகளும் துடிதுடித்து இறக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்துக்கே போனாலும் இந்தத் தீர்ப்புபாதுகாக்கப்பட வேண்டும் என்றார் உதடு துடிக்க.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications