தேமுதிக வேட்பாளர் திமுகவுக்கு ஜம்ப்
சென்னை:சென்னை மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடும் மேலும் ஒரு தேமுதிக வேட்பாளர் திமுகவுக்குத் தாவியுள்ளார்.
சென்னை மாநகராட்சியின் 67 வார்டுகளுக்கு நாளை மறு தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கலுக்குப் பின்னர் சில தேமுதிக வேட்பாளர்களும், பாஜகவினரும் திமுகவுக்கு ஆதரவாக போட்டியிலிருந்து விலகுவதாகஅறிவித்தனர்.
திமுகவினரின் மிரட்டல் காரணமாக தனது கட்சி வேட்பாளர்கள் போட்டியிலிருந்து விலகுவதாக தேமுதிக தலைவர்விஜயகாந்த் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இன்று ஒரு தேமுதிக வேட்பாளர் திமுகவுக்குத் தாவியுள்ளார்.144வது வார்டில் தேமுதிக சார்பில் போட்டியிடும் குணசேகரன், காங்கிரஸ் வேட்பாளர் மங்கள்ராஜுக்கு ஆதரவாகபோட்டியிலிருந்து விலகி விட்டார்.
அத்தோடு முன்னாள் மேயர் மா.சுப்ரமணியம், முன்னாள் எம்.எல்.ஏ. ந.பூ. ராமஜெயம் முன்னிலையில் திமுகவில்இணைந்தார்.
தற்போது இந்த வார்டில் மங்கள்ராஜ் தவிர பாஜக வேட்பாளர் ஏழுமலை மட்டுமே போட்டியில் உள்ளார்.












Click it and Unblock the Notifications